என் மலர்
உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சூலூரில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்
- சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சூலூர் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடத்தப்பட்டது
- 60-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக கலந்து கொண்டனர்
சூலூர்,
சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாளை நொய்யல் ஆற்றில் மற்றும் அருகில் உள்ள குளங்களில் கரைக்கப்பட உள்ளது.
இதையொட்டி சூலூர், சுல்தான்பேட்டை போலீசார் சூலூர், கண்ணம்பாளையம், பள்ளபாளையம், பீடம் பள்ளி காங்கேயம் பாளை யம், காடம்பாடி, அப்பநாய க்கன்பட்டி, பாப்பம்பட்டி, சுல்தான்பேட்டை, செஞ்சே ரிமலை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரி புத்தூர், ஜெ.கிருஷ்ணாபுரம், குமாரபாளையம் உள்ளிட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
மேலும் நேற்று மாலை சூலூர் போலீசார் ஆயுதப்படை மற்றும் சிறப்பு ஆயுதப்படைகாவலர்களுடன் சூலூர் சுற்றுவட்டார பகுதி யில் அணிவகுப்பு ஊர்வலங்களை நடத்தினர். இதன்மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த முடியும் என சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தெரிவித்தார்.
இந்த அணி வகுப்பு ஊர்வலத்தில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சூலூர் முக்கிய வீதிகளில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.