search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காரைக்காலில் போலீசார் விழிப்புணர்வு பேரணி
    X

    பொதுமக்கள் ஹெல்மெட் அணிவது குறித்து, போலீசார் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    காரைக்காலில் போலீசார் விழிப்புணர்வு பேரணி

    • இந்த பேரணியை, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • ஹெல்மெட் அணிந்து, அபராதத்தை தவிர்க்க வேண்டும் என்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில், புதுச்சேரி மாநிலம் முழுவதும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தி வரும் நிலையில், பலர் ஹெல்மெட்டை அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. காரைக்காலில் உள்ள போக்குவரத்து காவல்நிலையம் மற்றும் அனைத்து காவல்நிலைய போலீசார், தினசரி ஹெல்மெட் அணியாமல் செல்லும் 100-க்கு மேற்பட்டோரை பிடித்து தலா ரூ.1000 அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில், காரை க்காலில் பொதுமக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வாயிலில் போலீசார் நேற்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    இந்த பேரணியை, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் ஹெல்மெட்டுடன் பங்கேற்றனர். இந்த பேரணி, காரைக்காலின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வாயிலில் நிறைவு பெற்றது. பேரணியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் பேசியதாவது:- சாலை விபத்துகளில் எற்படும் உயிர்பலி மற்றும் பெரும் காயங்களை தவிர்க்க, ஹெல்மெட் மிக அவசியம். அதனால், அனைத்து போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். போலீசாரை பார்த்துதான் பொதுமக்களும் ஹெல்மெட் அணிவார்கள். முக்கியமாக, இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து, அபராதத்தை தவிர்க்க வேண்டும். என்றார்.

    Next Story
    ×