search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொத்தனூர் பேரூராட்சியில் 2-ம் கட்ட ஒருங்கிணைந்த  தூய்மை பணி முகாம்
    X

    பொத்தனூர் பேரூராட்சியில் 2-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பொத்தனூர் பேரூராட்சியில் 2-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம்

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் துவங்கப்பட்டது.
    • 80-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து தூய்மை பணி செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் துவங்கப்பட்டு வார்டு 10 திருவள்ளுவர்சாலை (குமரன் நகர்) பகுதிகளில் பொதுசுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வார்தல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டது. பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து தூய்மை பணி செய்தனர்.

    2-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாமிற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். முகாமில் மன்ற உறுப்பினர்கள், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன் மற்றும் அலுவலக பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வலர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×