என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணியால் மாற்றுப்பாதையில் தினமும்  விபத்துகளால் மக்கள் அவதி
  X

  பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணியால் மாற்றுப்பாதையில் தினமும் விபத்துகளால் மக்கள் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 1. 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • மேம்பால பணிகளை விரைவாக மேற்கொள்ள வாகனங்கள் மாற்று பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

  கோவை,

  கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன் பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1. 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

  இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, வேகமாக நடந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல மாதங்களாக தூண்களுக்கு இடையே காங்கீரிட் ஓடுதளம் அமைக்கும் பணிகள் மிகவும் மெதுவாக நடந்து வருகின்றன.

  கோவை- மேட்டுப்பாளையம் சாலை ஊட்டி, மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல முக்கியமான தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் போக்குவரத்து அதிகரித்து காணப்படும்.

  இதனிடையே மேம்பால பணிகளை விரைவாக மேற்கொள்ள வாகனங்கள் மாற்று பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன. மாற்றுவழி பாதையும் முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால் விபத்துகள் அதிகரித்துள்ளது.

  மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தாமதம் ஆவதால் கோவை- மேட்டுப்பாளையம் செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் மாற்றுப்பாதைகளில் ஒரு வழிப்பாதை வழியாக செல்வது அதிகரித்துள்ளது.

  குறிப்பாக எல்.எம்.டபிள்.யூ வழியாக ஒரு வழிப்பாதையில் பஸ்கள் அத்துமீறி செல்கிறது. இதனால் விபத்துகள் அதிகரிக்கிறது. வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்து செல்லும் நிலையே உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி எல்.எம்.டபிள்யூ அருகே ஒரு வழிப்பாதையில் வந்தது.

  இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கடைகளுக்கு அருகில் உள்ள சுவற்றில் மோதி நின்றது. அதிர்ஷடவசமாக கடைகளுக்குள் புகாமல் இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பஸ்கள் இருந்தவர்களும் காயம் எதுவும் இன்றி மிகவும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

  இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,

  பெரியநாயக்கன் பாளையம் மேம்பால பணிகள் தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருகிறது. மாற்றுப்பாதைகளில் பல இடங்களில் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளன.

  சில இடங்களில் மட்டுமே புதியதாக சாலை அமைக்கப்பட்டுள்ளன. அறிவிப்பு பலகைகள் இல்லை.

  இரவு நேரங்களில் மேம்பாலத்தை ஒட்டியே செல்லும் சாலைகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளன.

  அப்பகுதிகளில் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் புழுதி காற்று பறக்கிறது. உடனடியாக சாலைகளை சீரமைத்து தர வேண்டும். உடனடியாக மேம்பால பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றனர்.க்ஷ

  இதுகுறித்து போலீசார் கூறும்போது, போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பணியில் உள்ளனர். அவர்கள் அங்கு இல்லாத நேரம் இது போன்று நடந்துள்ளது. அரசு பஸ் ஒரு வழிப்பாதையில் சரியாக வந்தது. எதிரில் வாகனங்களால் நிலை தடுமாறியுள்ளது என்றனர்.

  Next Story
  ×