search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பணியிடங்களில் பெண்களை பாதுகாக்க புகார் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்- கலெக்டர் எச்சரிக்கை
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    பணியிடங்களில் பெண்களை பாதுகாக்க புகார் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்- கலெக்டர் எச்சரிக்கை

    • நிறுவனங்கள் வாரியாக உள்ள புகார் குழு நாளைக்குள் விதிமுறைப்படி அமைக்க வேண்டும்.
    • பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 பிரிவு 26 இன் கீழ் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியிடத்தில் பாலியல் வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2013 குறித்து அரசு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிறுவன ங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பயிற்சி நிலைய ங்கள், கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு இடங்கள், தொழி ற்சாலைகள், நிதி நிறுவனங்கள், விற்பனை கூடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு பயிற்சி நிறுவனங்கள், விளையாட்டு அரங்கங்கள் ஆகிய நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் பணிபுரியும் இடங்களில், மகளிர்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான குற்றங்கள் தடுக்கவும், புகார் தெரிவிக்கவும் நிறுவனங்கள் வாரியாக உள்ளக புகார் குழு நாளைக்குள் விதிமுறைப்படி அமைத்திட வேண்டும்.

    பணிபுரியும் இடத்தில் மூத்த பெண் பணியாளரை தலைவராக நியமனம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் பணிபுரியும் அலுவலகம், பிறதுறைகள் , பிற கிளைகள் , பிற பணியிடங்களில் இருந்து நியமிக்கலாம்.

    பெண்கள் சார்ந்த பிரச்ச னைகளை முன்னெடுத்து அவற்றை களை ந்திட விருப்பம் உடையவர் (அல்லது) சமூக பணிகளில் அனுபவம் (அ) சட்ட அறிவு பெற்ற இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். பெண்களுக்கான சமூக பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனம் /மகளிர் சங்கங்களை சார்ந்த அல்லது

    பாலியல் வன்கொடு மைகள் குறித்தவிழிப்பு ணர்வுடைய நபர்களில் ஒருவரை நியமிக்கப்பட வேண்டும். புகார் குழு அமைத்த நிறுவனங்கள் அதன் விவரத்தை வருகிற 28-ந் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.203, 3-வது தளம், புதிய மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு தெரிவிக்க வேண்டும். இந்த புகார் குழு அமைக்காத நிறுவனத்திற்கு பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 பிரிவு 26 இன் கீழ் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×