search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமத்தம்பட்டி பஸ் நிலையத்துக்கு வராத 2 அரசு பஸ்களுக்கு அபராதம்
    X

    கருமத்தம்பட்டி பஸ் நிலையத்துக்கு வராத 2 அரசு பஸ்களுக்கு அபராதம்

    • சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை
    • தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை

    சூலூர்,

    சூலூர் அடுத்த கருமத்தம்பட்டிக்கு வரும் அனைத்து பஸ்களும் நிலையத்துக்குள் வந்திருந்து பயணிகளை ஏற்றி செல்ல வேண்டுமென போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

    ஆனாலும் பெரும்பாலான பஸ்கள் கருமத்தம்பட்டி பஸ் நிலையம் வராமல், மேம்பாலத்தில் சென்று சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுகின்றனர். ஒருசில பேருந்துகள் கருமத்தம்பட்டி பேருந்து செல்லாது என கூறி பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர்.

    இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏற்கெனவே பல்வேறு போராட்டம் நடத்தினர். இதன்விளைவாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் கண்டிப்பாக கருமத்தம்பட்டி பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டுமென அரசு உத்தரவிட்டது. ஆனாலும் பலனில்லை.

    இந்த நிலையில் சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகசுந்தரம் கருமத்தம்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த 2 அரசு பஸ்கள் கருமத்தம்பட்டி பஸ் நிலையத்திற்கு வராமல், சுமார் ஒரு கி.மீ. தூரம் தள்ளி நின்று பயணிகளை நெடுஞ்சாலையில் இறக்கி விட்டது கண்டறியப்பட்டது.

    எனவே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரசு பஸ்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அந்த பஸ்களின் கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அத்து மீறி செயல்பட்டால் வாகனஓட்டிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இதுபற்றி மோட்டார் வாகன அதிகாரிகள் கூறுகையில், கருமத்தம்பட்டி பஸ் நிலையம் வராத வாகனத்தின் கண்டக்டர் நெப்போலியன் மற்றும் டிரைவர் செந்தில் ஆகியோருக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கருமத்தம்பட்டி பகுதியில் பஸ் நிலையம் வராத பேருந்துகள் குறித்து அடிக்கடி ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

    Next Story
    ×