search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் கோவிலில் பல்லக்கு திருவிழா
    X

    ஆகாச மாரியம்மன் கோவிலில் பல்லக்கு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்.

    நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் கோவிலில் பல்லக்கு திருவிழா

    • ஆகாச மாரியம்மனை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.
    • கூடியிருந்த பக்தர்கள் பூக்களை தூவி அம்மனை வரவேற்றனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள ஆகாச மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசையை தொடர்ந்து வரும் வெள்ளி க்கிழமையில், சமயபுரத்தி லிருந்து மாரியம்மன் மல்லி கைப்பூ, கைவளையலுக்கு ஆசைப்பட்டு ஆண்டுக்கு 15 நாட்கள் மட்டும் இங்கு வந்து தங்கி அருள்பாலிப்பதாக ஐதீகம்.

    வைகாசி திருவிழாவை யொட்டி நேற்று அரசலாற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து திருநறையூர் செங்கழுநீர் விநாயகர் கோவிலில் ஆகாச மாரியம்மன் அலங்கரி க்கப்பட்டு அங்கிருந்து நள்ளிரவில் மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மனை எழுந்தருள செய்து மேளதா ளங்கள் முழங்க திருநறையூர், நாச்சியார்கோவில் கிராமங்களில் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் உலா வந்தார். தொடர்ந்து, இன்று காலை அம்மன் பல்லக்கு கோவிலை வந்தடைந்தது.

    பின்னர், பல்லக்கில் இருந்த ஆகாச மாரியம்மனை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஆடி அசைந்து கோவிலுக்குள் கொண்டு சென்றனர். அப்போது கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் பூக்களை தூவி அம்மனை வரவேற்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து, லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன், மகிஷாசுரமர்த்தினி, சேஷசயன, ராஜராஜேஸ்வரி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி பெரிய திருவிழாவும், 7-ந்தேதி சிறிய தேரில் அம்மன் வீதி உலாவாக வந்து பின்னர் சமயபுரத்திற்கு அம்மன் எழுந்தருளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×