என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் சாலைப் பணிகளின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு
    X

    ராசிபுரம் - புதுக்கோட்டை சாலை பணிகளின் தரத்தை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் சாலைப் பணிகளின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு

    • ஒருங்கி ணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் தார் சாலைகள் அமைக்கப்பட்டது. இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மேலும் பசுமை நாமக்கல் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக கண்காணிப்பு பொறியாளர் மரக்கன்றுகள் நட்டார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் உட்கோட்டத்தில் ஒருங்கி ணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் தார் சாலைகள் அமைக்கப்பட்டது.

    இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்ட சாலைகளின் தரம் மற்றும் கனத்தினை ஆய்வு செய்தார்.

    மேலும் பசுமை நாமக்கல் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக கண்காணிப்பு பொறியாளர் மரக்கன்றுகள் நட்டார். நிகழ்ச்சியில் ராசிபுரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ்குமார், உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×