search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேம்பாலம் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
    X

    பள்ளிப்பாளையம் 4 சாலை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    மேம்பாலம் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

    • சங்ககிரி செல்லும் வழித்தடம் ஆகிய பகுதியில் விரைவில் சென்னை கன்னியாகுமரி தொழில் வழி தடம் திட்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.
    • இத்திட்டத்தின் சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் தலைமையில், உதவி பொறியாளர் கபில், மற்றும் சேலம், ஈரோடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்கள், குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆர்.டி.ஒ. தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், போலீசார் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் பஸ் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவு, மற்றும் சங்ககிரி செல்லும் வழித்தடம் ஆகிய பகுதியில் விரைவில் சென்னை கன்னியாகுமரி தொழில் வழி தடம் திட்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.

    சேலம், சங்ககிரி, குமார பாளையம், வெப்படை உள்ளிட்ட பகுதியில் இருந்து ஈரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், பள்ளிப்பாளையம் நான்கு சாலை பிரிவு வழியாக செல்ல முடியும். மேம்பாலம் பணி கள் தொடங்கப்பட்டால், இந்த வழித்தடத்தில் எந்த வாகனமும் செல்ல முடியாது.

    இதனால் வாகனங்கள் மாற்று வழியில் செல்லும் வகையில், இத்திட்டத்தின் சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் தலைமையில், உதவி பொறியாளர் கபில், மற்றும் சேலம், ஈரோடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்கள்,

    குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆர்.டி.ஒ. தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், போலீசார் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில், பள்ளிப்பா ளையம் நகராட்சி அலுவ லகம் எதிரில் செல்லும் சாலை வழியாக பத்திர அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், காந்திபுரம் முதல் வீதி வழியாக சென்று பாலம் வழியாக ஈரோடு செல்லும் வகையிலும், அதே போல ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்களும் இந்த மாற்று சாலை வழியாக செல்லும் வகையில் ஆய்வு செய்து ஆலோசனை செய்யப்பட்டது.

    இந்த மாற்று வழித்தடம் குறித்த அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட உள்ளது. அவர் அனுமதி அளித்தவுடன் இந்த மாற்று வழி நடைமுறைக்கு வந்துவிடும்.

    Next Story
    ×