search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அரசு மருத்துவமனையில் ரூ.2.74 கோடியில் புதிய கட்டிடங்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
    X

    குழந்தைகளுக்கான தீவிர காய்ச்சல் சிகிச்சை பிரிவு கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்த போது எடுத்தபடம். அருகில் சபாநாயகர் அப்பாவு, எம்.எல்.ஏ.க்கள் ரூபிமனோகரன், நயினார்நாகேந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.

    நெல்லை அரசு மருத்துவமனையில் ரூ.2.74 கோடியில் புதிய கட்டிடங்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

    • மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
    • பல்நோக்கு மருத்துவமனை அருகே புதிதாக ரூ.72.10 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள மருத்துவமனை கட்டப்பட உள்ள இடத்தினை ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    முடிவுற்ற கட்டிடங்கள்

    அந்த வகையில் இன்று காலை தூத்துக்குடி வந்த அவர் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் முடிவுற்ற மருத்தவமனை கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து கார் மூலம் நெல்லை வந்தார்.

    வி.எம். சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் காய்ச்சல் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ரூ.2.74 கோடி

    பின்னர் நெல்லை அரசு மருத்தவமனைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.2.74 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டி டங்களை திறந்து வைத்தார்.

    அந்த வகையில் ரூ.72 ½ லட்சத்தில் நுண்கதிர் துறையில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள், ரூ.26.9 லட்சத்தில் 10 படுக்கைகள் கொண்ட தீவிர அறுவைசிகிச்சைப்பிரிவு, ரூ.33.5 லட்சம் மதிப்பீட்டில் 12 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டி டங்களை திறந்து வைத்தார்.

    புதிய மருத்துவமனை

    தொடர்ந்து பல்நோக்கு மருத்துவமனை அருகே புதிதாக ரூ.72.10 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள மருத்துவமனை கட்டப்பட உள்ள இடத்தினை ஆய்வு செய்தார். பின்னர் மாணவிகள் தங்கும் விடுதியில் அதிநவீன உணவு விடுதியை திறந்து வைத்து 'தாய் கேர்' குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    மேலும் 2-ம் ஆண்டு மருத்துவ மாணவ, மாணவிகள் துறை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி னார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், கலெக்டர் விஷ்ணு, மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, டீன் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×