என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
- மாரியப்பன் மானூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
- மாரியப்பன் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள பள்ளமடை வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (வயது25). கட்டிட தொழிலாளியான இவர் நேற்றிரவு மானூருக்கு சென்றிருந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். மானூர் பஜாரில் வந்த போது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மாரியப்பன் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் மாரியப்பன் மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேர் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






