என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் திருநள்ளாறில் மோட்டார் சைக்கிள் திருட்டு
    X

    காரைக்கால் திருநள்ளாறில் மோட்டார் சைக்கிள் திருட்டு

    • ரூ.80 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை, வீட்டில் நிறுத்திவிட்டு, மனைவியுடன் தஞ்சாவூர் சென்றார்.
    • பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே அம்பகரத்தூர் அலா காலணியை சேர்ந்தவர் முகம்மது அலீம். இவர் துபாயில் வேலைபார்த்துவிட்டு, கடந்த மாதம் வீட்டு வந்தார். வீட்டில், தனது மனைவி ஜெசிமாவுடன் வசித்து வருகிறார். கடந்த 8-ந்தேதி மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை, வீட்டில் நிறுத்திவிட்டு, மனைவியுடன் தஞ்சாவூர் சென்றார். மீண்டும் கடந்த 15-ந் தேதி வீடு வந்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடிசென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×