என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜல்லி யார்டை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, இரணியல் ரெயில் நிலையத்தில் விஜய் வசந்த் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
- பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது.
- பலமுறை கோரிக்கைகள் வைத்தும் பலன் இல்லை.
கன்னியாகுமரி:
இரணியல் ரெயில் நிலையத்தில் அமைய இருக்கும் ஜல்லி யார்டு பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது. அதனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்திற்க்கு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் பலன் இல்லை.
இதனால் இன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் இரணியல் ரெயில் நிலையத்தின் முன்பு
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் கே.டி.உதயம், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், வட்டார தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Next Story