என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் பார் ஊழியரை தாக்கியவர் கைது
- பார் ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசி, பாட்டிலை உடைத்து தலையில் தாக்கினார்.
- அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம்-ஊட்டி செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை எதிரே பிரபல தனியார் மதுபான பார் செயல்பட்டு வருகிறது.
இந்த பாரில் நீலகிரி மாவட்டம் கேத்தியை சேர்ந்த மனோஜ்குமார்(47) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கேரளாவை சேர்ந்த சதீஷ்குமார், கண்ணன், ராஜன், சந்திரன் ஆகிய 4 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். நேற்று பாருக்கு ஒரு நபர் வந்து, மது அருந்தியுள்ளார். அவருக்கு பார் ஊழியரான சதீஷ்குமார் மது மற்றும் உணவு பொருட்களை வினியோகம் செய்தார்.
பின்னர் அந்த நபரிம் அதற்கான பணத்தை சதீஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் கொடுக்க மறுத்ததுடன், பார் ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசி, பாட்டிலை உடைத்து தலையில் தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த சக ஊழியர்கள், ஓடி வந்து, அந்த நபரை தடுக்க முயன்றனர். ஆனால் அவர், அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றார்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்த அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் காயம் அடைந்த சதீஷ்குமாரை மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பி யுள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பார் ஊழியரை தாக்கிய நபர், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த சரவணகுமார்(43) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ெஜயிலில் அடைத்தனர்.