search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உற்பத்தி நிறுத்த போராட்டம்
    X

    கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உற்பத்தி நிறுத்த போராட்டம்

    • மின் கட்டண உயர்வை கண்டித்து கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் வருகிற 20-ந் தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடக்கிறது.
    • அரசு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டுமென கப்பலூர் தொழிலாளர்கள் சிட்கோ சங்கத்தலைவர் ரகுநாதராஜா தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சிட்கோ தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. பல ஏக்கரில் உள்ள இந்த தொழிற் பேட்டையில் 500-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்து அங்கிருந்து விற்ப னைக்கு அனுப்பி வைக்கின்றன. இந்த சிட்கோ மூலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அண்மையில் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது மாநிலம் முழுவதும் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் நிலங்களை ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி குத்தகைக்கு விடாமல் புதிதாக 99 ஆண்டுகளுக்கு குத்தகை அல்லது வாடகைக்கு விட முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    மேலும் சிட்கோவில் இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கான நிலையான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்ட 2 முடிவுகளுக்கும் சிட்கோ தொழிலதிபர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேற்கண்ட உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கையும் வைக்கப் பட்டது. ஆனால் தமிழக அரசு இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க வில்லை.

    இதனை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) சிட்கோ தொழிற்பேட்டைகளில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கப்பலூரில் உள்ள சிட்கோ தொழிற் பேட்டையிலும் உற்பத்தி நிறுத்த போராட்டம் அன்றைய நாளில் நடைபெறுகிறது. அப்போது கோரிக்கைகள் தொடர்பாக மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.

    எனவே அரசு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டுமென கப்பலூர் தொழிலாளர்கள் சிட்கோ சங்கத்தலைவர் ரகுநாதராஜா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×