search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்புலன்ஸ் வழியை மறைத்து நின்ற டாக்டரின் காரால் மூதாட்டி பரிதாப சாவு
    X

    ஆரம்ப சுகாதார மருத்துவமனை வாசல் முன்பு நிறுத்தப்பட்டுள்ள கார்.

    ஆம்புலன்ஸ் வழியை மறைத்து நின்ற டாக்டரின் காரால் மூதாட்டி பரிதாப சாவு

    • ஆம்புலன்ஸ் வழியை மறைத்து நின்ற டாக்டரின் காரால் மூதாட்டி பரிதாப இறந்தார்.
    • தலைமை பெண் டாக்டரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை

    மதுரை புதூரை சேர்ந்தவர் பிரேமா (வயது 75). இவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் புதூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது மூதாட்டிக்கு நாடித்துடிப்பு குறைவாக உள்ளது.

    அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்' என்று டாக்டர்கள் அறிவுரை கூறினர். இதையடுத்து மூதாட்டியை அழைத்துச் செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வந்தது. ஆஸ்பத்திரிக்குள் வரும் வழியில் டாக்டரின் கார் நின்று கொண்டு இருந்தது. ஊழியர்கள் ஆம்புலன்ஸை ஆஸ்பத்திரிக்கு வெளியே நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் மூதாட்டியை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு அழைத்து வந்து 108 ஆம்புலன்சில் ஏற்றினர். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் புறப்பட்டது.

    இருந்த போதிலும் மூதாட்டி பிரேமா வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மூதாட்டியின் மகள் சுப்புலட்சுமி கூறுகையில், என் தாயாருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை ஆட்டோவில் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்தோம். மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் தேவையற்ற கால தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக என் தாயார் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார் என்றார். மதுரை புதூர் அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் நிற்க வேண்டிய இடத்தில் தலைமை பெண் டாக்டரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பெண் டாக்டரிடம் கேட்டபோது, "ஆம்புலன்சை இடம் மாற்றும் முடிவை நான் எடுக்கவில்லை. மாநகராட்சி நகர் நல சுகாதார அதிகாரி உத்தரவின் பேரில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நோயாளி உயிரிழப்புக்கும், ஆம்புலன்ஸ் வெளியே நின்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.

    மாநகராட்சி நகர்நல சுகாதார அதிகாரி வினோத் கூறுகையில், "மருத்துவமனை வளாகத்தில் வெளி நோயாளிகள் அமர்வதற்காக தான் அந்த இடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்காக, புதூர் பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இட நெருக்கடி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மற்றபடி இதில் எந்த உள்நோக்கமும் இல்லை" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×