search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மாணவிக்கு பாராட்டு
    X

    மாநில செஸ் போட்டியில் வெற்றி பெற்று 3-ம் இடம் பிடித்த மாணவி சோலையம்மாளை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

    மதுரை மாணவிக்கு பாராட்டு

    • செஸ் போட்டி: 3ம் இடம் பிடித்த மதுரை மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
    • கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    மேலூர்

    தமிழக அரசின்பள்ளி கல்வித்துறை சார்பில் 44-வது சதுரங்க ஒலிம்பி யாட்-2022 மாநில அளவிலான சதுரங்க போட்டி சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    இப் போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மற்றும் 2 இடங்களை பிடித்த 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு விளை யாடினர். மொத்தம் 6 சுற்றுகள் கொண்டதாக போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியின் முடிவில் மதுரை மேலூர் ஒன்றியம், அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி அ.சோலையம்மாள் 5 சுற்றுகளில் வெற்றி பெற்று, 3-ம் இடம் பெற்றார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளிக்கல்வி துறை கமிஷனர் நந்தகுமார், இணை இயக்குனர் அமுதவல்லி ஆகியோர் பதக்கமும், சான்றிதழும், ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கினர்.

    ஏற்கனவே மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.பிரதீப், தேவ்நாத், .கலைச்செல்வி ஆகிய 3 பேர் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டு வெளிநாட்டு வீரர்களை அழைத்து வந்து அறிமுகம் செய்யும் வாய்ப்பும், விமானத்தில் செல்லும் வாய்ப்பும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரடியாக காணும் வாய்ப்பும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர், மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், மேலூர் வட்டார கல்வி அலுவலர்கள் மீனா, குளோரி, அ.வல்லா ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியை மணிமேகலை, இம்மாணவிக்கு சதுரங்க பயிற்சி அளித்தவரும், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியருமான செந்தில்குமார், அ.வல்லா ளப்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், சேர்மன் குமரன், உதவித் தலைமை ஆசிரியர்

    வாசிமலை, உடற்கல்வி ஆசிரியர்கள் சேதுபதி ராஜா, அறிவரசன், கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×