search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    22 கிலோ கஞ்சா பறிமுதல்
    X

    22 கிலோ கஞ்சா பறிமுதல்

    • 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    • சோதனையில் அவர்களிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    மதுரை

    கஞ்சா, மது, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட போதை வஸ்துக்களால் இளம் வயதினர் மிகவும் சீரழிந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும் போதை பழக்கத்தில் ஆளாகின்றனர்.

    இதனால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்கிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, குடும்பத்தில் தகராறு, பொருளாதார இழப்பு உள்ளிட்டவை நிகழ்கிறது. கஞ்சா கடத்தல் தடுப்பு சம்பந்தமாக மதுரை மாவட்ட சூப்பிரண்டு சிவபிரசாத் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

    கஞ்சா கடத்தியவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்தும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தும் மாவட்டம் முழு வதும் அதிரடி நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று இருந்த 2 பேரை பிடித்து விசாரித்த னர். முன்னுக்கு பின் முர ணாக தகவல் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.

    சோதனையில் அவர்க ளிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் கஞ்சா கடத்தியது மேக்கிழார் பட்டி சரவணன் (வயது 27), மேலபுதூர் சரவணன்(வயது 22) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×