என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தருமபுரி வழியாக பெங்களூரு செல்லும் ரெயில் நேரம் மாறுகிறது.
    • இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஓசூர்,

    தருமபுரியிலிருந்து ஓசூர் வழியாக பெங்களூருக்கு பாசஞ்சர் ரயில் சென்று வருகிறது. ஓசூரிலிருந்து வேலைக்கு செல்வோர், அனைத்து தரப்பினர் 1,000-க்கும் மேற்பட்டோர் இந்த ரெயிலில் நாள்தோறும் பெங்களூரு செல்கின்றனர்.

    தற்போது தருமபுரி யிலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு ஓசூர் வழியாக பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்தை காலை 8.10 மணிக்கு சென்றடைகிறது.

    இந்தநிலையில் வருகிற 20-ந் தேதி முதல், ஒன்றரை மணிநேரம் தாமதமாக, அதாவது 6.30 மணியளவில் தருமபுரி யிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு 10 மணியளவில் சென்று சேர்வதாக, ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனால் ரயில் பயணிகள் மிகவும் அதிருப்தி யடைந்துள்ள னர். மேலும், சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறை களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழிலாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்லமுடியாத சிரமம் ஏற்படுவதாகவும் வேதனை யடைந்துள்ளனர்.

    இதையடுத்து ஓசூர் ரயில் நிலையத்தில், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரனிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கி, அதில் ரயில் நேரத்தை மாற்றக்கூடாது. தற்போதுள்ள நேரமே தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட அவர், இது சம்பந்தமாக ரயில்வே துறை அதிகாரிகளிடம் பேசி, தற்போதுள்ள நேரமே தொடர ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

    அப்போது, மேற்கு மாவட்ட பா.ஜ.க துணைத்தலைவர் ராம கிருஷ்ணன், கட்சி நிர்வாகி பாரதிராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • சந்தேகத்திற்கு இடமாக பஸ் நிலையத்தில் நின்றார்.
    • 31 கிலோ குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரிவி வந்தது.

    ஓசூர், 

    போலீசார் பஸ் நிலைப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை சோதனை செய்ததில் அவர் பையில் 31 கிலோ குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரிவி வந்தது.

    இதன் மதிப்பு ரூ.20,000ஆகும். மேலும் விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் நெல்வாடியை சேர்ந்த வினோத்குமார்(29) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    • ரோந்து பணியில் ஈடுபட்ட போது சிக்கினார்.
    • ரூ.4,800 மதிப்புள்ள 12 கிலோ ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான ஹான்ஸ் வைத்திருந்த மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த சம்பத் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.4,800 மதிப்புள்ள 12 கிலோ ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

    • குற்ற நிகழ்வுகள் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
    • ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படும்

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.

    பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசும்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குற்ற நிகழ்வுகள் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள், குற்றவாளிகள் ஒருவரும் தப்ப முடியாது, பெண்கள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. சங்கு. ஊத்தங்கரை டி.எஸ்.பி. அலெக்சாண்டர், ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன், அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் சோபா திருமால்முருகன், ஊத்தங்கரை வட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்கள் மகேஸ்குமரன், சிவபிரகாசம், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மாலதி நாராயணசாமி, பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மற்றும் காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

    • மூச்சிரைப்பு நோயால் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • வீட்டில் தூக்குபோட்டு உயிரை மாய்த்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பத்தனப்பள்ளி வி .கே.ஆர் . நகரை சேர்ந்தவர் முஹம்மது சித்திக் (வயது 18). டிப்ளமோ படித்து வந்த முஹம்மது சித்திக் சமீப காலமாக மூச்சிரைப்பு நோயால் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.

    பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதில் மனமுடைந்த அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மழை பெய்ததால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின்மீது பைக் மோதியது.
    • வீட்டுக்கு திரும்பிய போது நேர்ந்த பரிதாபம்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டன பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 21). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். வேலையை முடித்து விட்டு தனது மோட்டார்சைக்கிளில் கோவிந்தராஜ் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    சின்னேபள்ளி பகுதியில் அவர் வந்த போது மழை பெய்துள்ளது. இதனால் கோவிந்தராஜ் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின்மீது மோதிவிட்டார்.

    இதில் பலத்த காயமடைந்து கிடந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மகாராஜாக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இருதரப்பினர் மோதல் ஏற்பட்டது.
    • மாட்டை அழைத்து சென்ற போது ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள சின்னம்பாளே தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வேடியம்மாள் (வயது40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கும் இடையே மேய்ச்சலுக்கு மாட்டை அழைத்து செல்லும் போது மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் குமார், கலைசெல்வி, ேவடி, பெரியபாப்பா ஆகிய 4 பேரும் சேர்ந்து வேடியம்மாளை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வேடியம்மாள் போச்சம்பள்ளி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் குமார் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 4 ஆண்டுகளாக கணினி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.
    • கழிப்பறையில் கேமரா பொருத்தி படம் பிடித்து கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள போது மாட்டி கொண்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் யூனியன் அலுவலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக கணினி ஆபரேட்டராக சுதாகர் (வயது34) என்பவர் பணிபுரிந்து வந்தார்.

    இவர் அங்குள்ள கழிப்பறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது. இதனை அறிந்த சுதாகரின் உறவினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அருண்மொழியிடம் கூறினர்.

    இது குறித்து அவர் பர்கூர் அனைத்து மளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா சுதாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரோந்து சென்ற போது போலீசிடம் சிக்கியுள்ளனர்.
    • புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் போலீசார் சுல்தான்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற சுல்தான்பேட்டையை சேர்ந்த பிரபுசாமி (65), நவீத் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • வீட்டை விட்டு வெளியே சென்றவர் காணவில்லை.
    • போலீசில் புகார் கொடுக்கப்பட்டதால் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவசெந்தில்குமார். இவரது மகன் தினேஷ்குமார்(19). இவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 12-ந்தேதி முதல் தினேஷ்குமாரை காணவில்லை பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால் ஓசூர் சிப்காட் போலீசில் தினேஷ் குமாரின் தாய் உஷா புகார் செய்தார். புகாரின் பேரில் ஓசூர் சிப்காட்போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் குமாரை தேடி வருகின்றனர்.

    இதேபோல ராயக்கோட்டை அருகேயுள்ள பாஞ்சாலி நகர் பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகன் பாலாஜி என்ற 10-ம் வகுப்பு மாணவன் கடந்த 11-ந்தேதி முதல் மா யமாகிவிட்டான் இதுகுறித்து பாலாஜியின் தாய் கவிதா கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை தேடி வருகின்றனர்.

    • மழைநீர் சாலையில் பெருக்கு தாழ்வான பகுதிக்கு மழை நீர் ஓடியது.
    • உழவர் சந்தை வளாகத்தில் மழைநீர் வெளியேற்ற முடியாமல் குளம்போல் தேங்கின.

    தருமபுரி,

    வெப்ப சலனம் காரண மாகவும் கடந்த 2 தினங்களாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் கனமழை பெய்துள்ளது.

    இந்த நிலையில் நேற்றுமாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென இரவு 7 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய விட்டு விட்டு மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது.

    பயங்கர சத்தத்துடன் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் இந்த மழை பெய்துள்ளது.

    இதனால் தருமபுரி நகரம், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, தொப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், அரூர், பென்னா கரம், ஒகேனக்கல், பாலக்கோடு, காரிமங்கலம் உள்பட மாவட்டத்தில் பல இடங்களில் இடி மின்ன லுடன் மழை பெய்தது.

    இந்த மழையால் பல இடங்களில் அதிகாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தருமபுரி நகரில் அதிகாைல பெய்த இந்த மழைநீர் சாலையில் பெருக்கு தாழ்வான பகுதிக்கு மழை நீர் ஓடியது.

    தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அருகே சாலையே தெரியாத அளவுக்கு தண்ணீர் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இேதபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கனமழை ெபய்துள்ளது. இதனால் ராயக்கோட்டை, நெடுங்கல், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், தேன்கனி க்கோட்டை, அஞ்செட்டி, பெலுகொண்டபுரம், சூளகிரி, கல்லாவி, மத்தூர், சிங்காரபேட்டை உள்பட இடங்களில் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி சந்தையில் தேங்கும் மழைநீர்

    கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் மொத்தம் 72 கடைகள் உள்ளன. கடந்த 2009 ஆண்டு முதல் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    உழவர் சந்தையில் தேங்கும் மழைநீர் வெளியேறும் வகையில் வழி வகை செய்யப்பட்டிருந்தது. உழவர் சந்தையின் அருகே கிருஷ்ணகிரி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க லிமிடெட் மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குளிர்பதன கிடங்கு கட்டப்பட்டது.

    குளிர்பதன கிடங்கு கட்டிய பொழுது உழவர் சந்தையில் இருந்து மழைநீர் வெளியேறும் பகுதியை அடைத்து விட்டனர். இதனால் உழவர் சந்தை வளாகத்தில் மழைநீர் வெளியேற்ற முடியாமல் குளம்போல் தேங்கின. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதா னத்தில் மழை நீர் தேங்கி யது. இதனால் பள்ளி மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • மின்சார வயர்ந்து அறுந்து பசு மாட்டின் மீது விழுந்தது.
    • நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள நாகரசம்பட்டி அருகே உள்ள விளங்காமுடியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 38). விவசாயி. கடந்த 15-ந் தேதி இவர் வளர்த்து வந்த பசு மாடு அந்த பகுதியில் உள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.

    அந்த நேரம் அவ்வழியாக சென்ற மின்சார வயர்ந்து அறுந்து பசு மாட்டின் மீது விழுந்தது. இதில் மாடு மின்சாரம் தாக்கி இறந்தது.

    இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×