என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுதாகர்.
மத்தூரில் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து படம் பிடித்த கணினி ஆபரேட்டர் சிக்கினார்
- கடந்த 4 ஆண்டுகளாக கணினி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.
- கழிப்பறையில் கேமரா பொருத்தி படம் பிடித்து கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள போது மாட்டி கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் யூனியன் அலுவலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக கணினி ஆபரேட்டராக சுதாகர் (வயது34) என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இவர் அங்குள்ள கழிப்பறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது. இதனை அறிந்த சுதாகரின் உறவினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அருண்மொழியிடம் கூறினர்.
இது குறித்து அவர் பர்கூர் அனைத்து மளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா சுதாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






