என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகரசம்பட்டி அருகே மின்வயர் அறுந்து விழுந்து பசுமாடு சாவு
- மின்சார வயர்ந்து அறுந்து பசு மாட்டின் மீது விழுந்தது.
- நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள நாகரசம்பட்டி அருகே உள்ள விளங்காமுடியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 38). விவசாயி. கடந்த 15-ந் தேதி இவர் வளர்த்து வந்த பசு மாடு அந்த பகுதியில் உள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.
அந்த நேரம் அவ்வழியாக சென்ற மின்சார வயர்ந்து அறுந்து பசு மாட்டின் மீது விழுந்தது. இதில் மாடு மின்சாரம் தாக்கி இறந்தது.
இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






