என் மலர்
கிருஷ்ணகிரி
- சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
- 19 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி
ஓசூர் டவுன் போலீசார் பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் ரூ.11 ஆயிரம் மதிப்புடைய 19 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சென்னை சிட்லப்பாக்கத்தை சேர்ந்த ராஜன் (வயது 55) என்ற நபரை கைது செய்தனர்.
- குடும்ப சொத்தில் தனது பங்கை பிரித்து தர சொல்லி தகராறு செய்துள்ளார்.
- போதையில் விஷத்தை குடித்து விட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே யுள்ள அத்தப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி.இவரது மகன் சிவன் (வயது 22).
குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த சிவன் குடும்ப சொத்தில் தனது பங்கை பிரித்து தர சொல்லி தகராறு செய்துள்ளார். அதற்கு குடும்பத்தினர் மறுத்து விட்டனர் . இதனால் போதையில் விஷத்தை குடித்து விட்டார்.
சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து சிவனின் சகோதரர் முத்து தந்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- முகூர்த்த தினம் என்பதால் அதிக அளவில் திருமணங்கள் நடைபெற்றது.
- வழக்கத்தை விட வாகன நெரிசல் சற்று அதிகரித்து காணப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சுற்றுவட்டாரத்தில் முகூர்த்த தினம் என்பதால் அதிக அளவில் திருமணங்கள் நடைபெற்றது.
இதனால் காலை அதிக அளவு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றதால் வழக்கத்தை விட வாகன நெரிசல் சற்று அதிகரித்து காணப்பட்டது.
இதில் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த தி.மு.க. மாவட்ட ஊராட்சி குழு துணைச்சேர்மன் ஷேக் ரஷீத் மற்றும் ஒன்றிய துணை செயலாளர் ராமசந்திரன் மற்றும் நிர்வாகிகள் வாகன நெரிசலில் சிக்கினர்.
இந்த நிலையில் வாகன நெரிசல் சரியாகாத காரணத்தால் சேர்மன் காரை விட்டு கீழே இறங்கி நடந்து சென்று வாகன நெரிசலை சீர்படுத்தினார்.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
- ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தொடும் அளவிற்கு ஆற்றில் நீர் பாய்ந்தோடுகிறது.
- பாய்ந்தோடும் தண்ணீருக்கு தேற்று மாலை சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற தேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர சாமி கோவிலையொட்டிய பகுதியில் தென்பெண்ணை ஆறு பாய்ந்தோடுகிறது.
சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
அந்தப் பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தொடும் அளவிற்கு ஆற்றில் நீர் பாய்ந்தோடுகிறது.
இந்த நிலையில், தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சாமி கோவில் நிர்வாகம் சார்பில் ஆற்றில் பாய்ந்தோடும் தண்ணீருக்கு தேற்று மாலை சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அப்போது, உற்சவ மூர்த்தியை ஆற்றங்கரையோரத்தில் அலங்கரித்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, ஆற்று நீருக்கும் தீபாராதனை செய்து தெப்பம் விடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்று கரை புரண்டோடும் ஆற்று நீர் வெள்ளம் காரணமாக தக்ஷின பினாகினி என்று அழைக்கப்படும் தென்பெண்ணை ஆற்றை கங்கை அம்மனாக கருதி, அங்குள்ள மக்களை பாதுகாக்க வேண்டியும், உக்கிரம் கொண்ட கங்கை அம்மனை சாந்தப்படுத்தும் விதமாகவும், வாரணாசியில் உள்ள கங்கா தேவிக்கு செய்யப்படும் பூஜைகளை போன்று இங்கு தெப்பம் விட்டு பூஜைகள் நடைபெறுவது ஐதீகம் எனக் கூறப்படுகிறது.
இதில், கோபசந்திரம், ஆலியாளம், காமன் தொட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு ஆற்று வெள்ளத்தை பூஜை செய்து வழிபட்டனர்.
- ரூ.34 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
- நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட முனீஸ்வர் நகர், நாதன் நகர், சீனிவாசா கார்டன் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.34 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
மாநகராட்சி ஆணை யாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர் வெங்கடேஷ் , மாநகராட்சி நிலைக்குழு தலைவர் மாதேஸ்வரன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொடர் மழை காரணமாக வண்ணார் மடுவு ஆற்றில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
- ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி ஊராட்சிக்கு உட்பட்ட குஜ்ஜிவகுத்தான் கொட்டாய், பாகிமானூர் கொள்ளகொட்டாய், இருளர் காலனி, வாத்தியார் கொட்டாய் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.
இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாணவ மாணவிகள் தங்களது அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்கு தங்கள் கிராமத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து சென்று ஜிட்டோபாளபள்ளி கிராமத்தின் வழியாக கிருஷ்ணகிரி, மத்தூர், ஜெகதேவி போன்ற பகுதிகளுக்கு வேலைக்காக வும் மாணவ மாணவிகள் கல்வி கற்கவும் செல்கி றார்கள்.
இந்த ஒன்றரை கிலோ மீட்டர் நடை பயணத்தில் இடையே வண்ணார் மடுவு ஆறு ஒடுகிறது இதனை இப்பகுதி பொதுமக்கள் கடந்த சென்று வருகின்றனர். இப்படி பல தலைமுறையாக சென்று வரும் இந்த மக்களுக்கு மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் சென்று வர பாதை இல்லாமல் ஏழு கிலோமீட்டர் சுற்றி பாகிமானூர், சாப்பனமூட்லு, வழியாக சுற்றி செல்கின்றனர்.
இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்ல சிரமம் ஏற்படுவதாகவும் இதனைப் போக்க ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வண்ணார் மடுவு ஆற்றில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதனால் ஏழு கிலோமீட்டர் சுற்றி செல்ல முடியாத நிலையில் ஆபத்தான நிலையில் 2 அடி உயரத்தில் முழங்கால் அளவு ஒடும் வெள்ளத்தை கிராம மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்துக்கொண்டு தங்களது அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளுக்காகவும் கல்வி கற்கவும் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.
அந்த பகுதியில் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அல்லது உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கல்குவாரி பகுதியில் கூட்டமாக பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருப்பது தெரிய வந்தது.
- சீட்டு கட்டுகள் மற்றும் பணம் ரூ 10 ஆயிரத்து 400, 3 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலரஹள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் மறைவான இடத்தில் நாள்தோறும் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் ஊத்தங்கரை டி.எஸ்.பி. அமலா அட்வின் உத்தரவின் படி தனிப்படை போலீஸார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது கல்குவாரி பகுதியில் கூட்டமாக பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருப்பது தெரிய வந்தது. அங்கு பெரிய ஆலரஹள்ளி பகுதியை சேர்ந்த பாஷா (எ)பாதூஷா (வயது 52), மத்தூர் அருகே உள்ள அத்திகானூர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (34), கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பரமசிவம் (42), தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள எம்.வேட்டரப்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் (31), மத்தூர் அருகே உள்ள கமலாபுரம் பகுதியை சேர்ந்த ரகு ( 29) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணம் ரூ 10 ஆயிரத்து 400, 3 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
அங்கிருந்து தப்பியோடிய சின்னஆலரஹள்ளி பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மீது மத்தூர் உதவி காவல் ஆய்வாளர் மோகன் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றார்.
- தோட்டத்தில் இருந்த கிணற்றில் அவர் தவறி விழுந்தார்.
- பாஸ்கரனுக்கு நீச்சல் தெரியாது. எனவே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா அம்மனேரி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 32).
விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிற்கு சென்றார். அப்போது அந்த தோட்டத்தில் இருந்த கிணற்றில் அவர் தவறி விழுந்தார்.
பாஸ்கரனுக்கு நீச்சல் தெரியாது. எனவே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து பாஸ்கரனின் மனைவி வளர்மதி தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மரங்களின் வேர் வெளிப்புறத்தில் உள்ள சுவர்களைத் துளைத்து வெளியே வருகின்றன.
- நடந்து செல்பவர்கள் எப்பொழுது சுவர் இடிந்து தலை மீது விழுமோ என்கிற அச்சத்தில் இந்த வீட்டை கடந்து செல்கின்றனர்.
காவேரிப்பட்டிணம் ,
காவேரிப்பட்டிணம் பன்னீர்செல்வம் தெருவில் ராஜகாளியம்மன் கோவில் அருேக உள்ள ஒரு வீட்டில் 15 வருடங்களுக்கு மேலாக யாரும் குடி இல்லாத காரணத்தால் சிதிலம் அடைந்துள்ளது.
அந்த வீட்டின் மாடியில் ஏராளமான மரங்கள் வளர்ந்து உள்ளன. இதனால் மழைநீர் வெளியேறாமல் மாடியிலேயே தேங்கி உள்ளது.
மேலும் மரங்களின் வேர் வெளிப்புறத்தில் உள்ள சுவர்களைத் துளைத்து வெளியே வருகின்றன. இதனால் சுவரில் விரிசல் ஏற்பட்டு எப்பொழுது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.
இதனால் இப்பகுதியில் நடந்து செல்பவர்கள் எப்பொழுது சுவர் இடிந்து தலை மீது விழுமோ என்கிற அச்சத்தில் இந்த வீட்டை கடந்து செல்கின்றனர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களோ அல்லது அதிகாரிகளோ விபத்து ஏற்படும் முன் அந்த வீட்டை இடித்தோ அல்லது சரி செய்யவோ வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விவசாய கிணற்றுக்குள் கண்ணகி பிணமாக மிதந்தது தெரியவந்தது.
- போலீசார் விரைந்து வந்து கண்ணகியின் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மத்தூர் ,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள கவுண்டனூரை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி கண்ணகி (வயது 45).
இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளார். கண்ணகிக்கு கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 7-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணகி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.பல்வேறு இடங்களில் தேடியும் அவர் பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சம்பத்துக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்குள் கண்ணகி பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து கண்ணகியின் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்ணகி கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தாரா?அல்லது தற்கொலை செய்துகொண்டார்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இவர் வளர்த்து வந்த ஆடு திருடுபோய்விட்டது.
- வீட்டில் ஆட்டை திருடியவர் என்பதும் கும்பகோணத்தை சேர்ந்த சிவமணி (எ ) மணி (வயது 29) என்பதும் தெரிய வந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி அடுத்துள்ள சிங்கா ரப்பேட்டை சையது நகரை சேர்ந்தவர் சவுக்கத் அலி (வயது 40). இவர் வளர்த்து வந்த ஆடு திருடுபோய்விட்டது.
இதுகுறித்து சிங்கா ரப்பேட்டை போலீசில் சவுக்கத் அலி புகார் கொடுத்தார். இந்நிலையில் சிங்காரப்பேட்டையில் நேற்று நடந்த ஆட்டு சந்தையில்திருடிய ஆட்டை விற்கவந்த மர்ம நபர் மீது மற்ற வியாபாரிகள் சந்தேகப்பட்டு போலீசுக்கு தெரிவித்தனர்.
போலீசார் அந்த ஆசாமியை கைது செய்து விசாரித்ததில் சவுக்கத் அலி வீட்டில் ஆட்டை திருடியவர் என்பதும் கும்பகோணத்தை சேர்ந்த சிவமணி (எ ) மணி (வயது 29) என்பதும் தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தோப்பில் ஒரு ஆசாமி அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.
- வாக்குவாதத்தில் போதை ஆசாமி அருகே கிடந்த கட்டையை எடுத்து அருணை சரமாரியாக தாக்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்துள்ள காவேரிப்பட்டிணம் சின்னாறு தெருவை சேர்ந்தவர் அருண்
(வயது 37).
இவர் தனக்கு சொந்த மான மாந்தோப்புக்கு சென்றார் . அப்போது அந்த தோப்பில் ஒரு ஆசாமி அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அருண் தனது தோப்பில் அமர்ந்து மது குடிப்பது ஏன் என்று கண்டித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போதை ஆசாமி அருகே கிடந்த கட்டையை எடுத்து அருணை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அருண் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அருண் தந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து அருணை தாக்கிய கருக்கன்சாவடி பகுதியை சேர்ந்த ஜம்பு (எ ) ஈஸ்வரன் (வயது 43) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






