என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடு திருடிய ஆசாமி கைது"

    • இவர் வளர்த்து வந்த ஆடு திருடுபோய்விட்டது.
    • வீட்டில் ஆட்டை திருடியவர் என்பதும் கும்பகோணத்தை சேர்ந்த சிவமணி (எ ) மணி (வயது 29) என்பதும் தெரிய வந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி அடுத்துள்ள சிங்கா ரப்பேட்டை சையது நகரை சேர்ந்தவர் சவுக்கத் அலி (வயது 40). இவர் வளர்த்து வந்த ஆடு திருடுபோய்விட்டது.

    இதுகுறித்து சிங்கா ரப்பேட்டை போலீசில் சவுக்கத் அலி புகார் கொடுத்தார். இந்நிலையில் சிங்காரப்பேட்டையில் நேற்று நடந்த ஆட்டு சந்தையில்திருடிய ஆட்டை விற்கவந்த மர்ம நபர் மீது மற்ற வியாபாரிகள் சந்தேகப்பட்டு போலீசுக்கு தெரிவித்தனர்.

    போலீசார் அந்த ஆசாமியை கைது செய்து விசாரித்ததில் சவுக்கத் அலி வீட்டில் ஆட்டை திருடியவர் என்பதும் கும்பகோணத்தை சேர்ந்த சிவமணி (எ ) மணி (வயது 29) என்பதும் தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×