என் மலர்
உள்ளூர் செய்திகள்

பராமரிப்பின்றி காணப்படும் வீட்டின் வெளிப்புற சுவர் விரிசலை படத்தில் காணலாம்.
காவேரிப்பட்டிணத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டின் சுவரால் பாதசாரிகள் அச்சம்
- மரங்களின் வேர் வெளிப்புறத்தில் உள்ள சுவர்களைத் துளைத்து வெளியே வருகின்றன.
- நடந்து செல்பவர்கள் எப்பொழுது சுவர் இடிந்து தலை மீது விழுமோ என்கிற அச்சத்தில் இந்த வீட்டை கடந்து செல்கின்றனர்.
காவேரிப்பட்டிணம் ,
காவேரிப்பட்டிணம் பன்னீர்செல்வம் தெருவில் ராஜகாளியம்மன் கோவில் அருேக உள்ள ஒரு வீட்டில் 15 வருடங்களுக்கு மேலாக யாரும் குடி இல்லாத காரணத்தால் சிதிலம் அடைந்துள்ளது.
அந்த வீட்டின் மாடியில் ஏராளமான மரங்கள் வளர்ந்து உள்ளன. இதனால் மழைநீர் வெளியேறாமல் மாடியிலேயே தேங்கி உள்ளது.
மேலும் மரங்களின் வேர் வெளிப்புறத்தில் உள்ள சுவர்களைத் துளைத்து வெளியே வருகின்றன. இதனால் சுவரில் விரிசல் ஏற்பட்டு எப்பொழுது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.
இதனால் இப்பகுதியில் நடந்து செல்பவர்கள் எப்பொழுது சுவர் இடிந்து தலை மீது விழுமோ என்கிற அச்சத்தில் இந்த வீட்டை கடந்து செல்கின்றனர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களோ அல்லது அதிகாரிகளோ விபத்து ஏற்படும் முன் அந்த வீட்டை இடித்தோ அல்லது சரி செய்யவோ வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






