என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மத்தூர் அருகே  மாயமானதாக தேடப்பட்ட பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
  X

  மத்தூர் அருகே மாயமானதாக தேடப்பட்ட பெண் கிணற்றில் பிணமாக மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விவசாய கிணற்றுக்குள் கண்ணகி பிணமாக மிதந்தது தெரியவந்தது.
  • போலீசார் விரைந்து வந்து கண்ணகியின் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மத்தூர் ,

  கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள கவுண்டனூரை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி கண்ணகி (வயது 45).

  இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளார். கண்ணகிக்கு கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

  இந்நிலையில் கடந்த 7-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணகி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.பல்வேறு இடங்களில் தேடியும் அவர் பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

  இந்நிலையில் சம்பத்துக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்குள் கண்ணகி பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  போலீசார் விரைந்து வந்து கண்ணகியின் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  கண்ணகி கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தாரா?அல்லது தற்கொலை செய்துகொண்டார்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×