என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சரக அளவில் தடகள போட்டிகள் கிருஷ்ணகிரியில் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி பாராட்டினார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சரக அளவில் தடகள போட்டிகள் கிருஷ்ணகிரியில் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தை வென்றனர். மாணவி தஷிதா 600 மீட்டர், 400 மீட்டர் உயரம் தாண்டுதலில் முதலிடமும், தயனிதா 100, 200 மீட்டர் நீளம் தாண்டுதலில் முதலிடமும் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.

    வசந்த் குண்டு எறிதலில் முதலிடமும், தஸ்கீன், மோனாஸ்ரீ இறகுபந்தில் முதலிடமும், முகமது சித்திக், பிரதாப் கேரம் விளையாட்டு போட்டியில் முதலிடமும், அப்துல் அலி, இஸ்மாயில் ஜபியுல்லா, முகமது சித்திக், முகமது சவுபன், சுபிஷன், முகமது யூசுப், பிணிகா, ஸ்வப்னா, ஹேப்பி, தானியா, நித்ய பாவிகா ஆகியோர் இறகு பந்தில் 2-ம் இடமும், தர்ணிகா அருள் கேரமில் 2-ம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

    இந்த மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி பாராட்டினார். அவர் பேசுகையில் மாணவ, மாணவிகள் எதிர்வரும் விளையாட்டு போட்டிகளில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும் என்று கூறி பரிசுகளை வழங்கினார்.

    அப்போது பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர்பாஷா, உடற்கல்வி ஆசிரியர் தமீஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடந்த மார்ச் 7-ந் தேதி நடை பயணத்தை தொடங்கினார்.
    • பெண்கள் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசியதாகவும், விக்ரம் கூறினார்.

    ஓசூர்,

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விக்ரம் (23), பி.ஏ. பட்டதாரியான இவர், பெண் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேசியக்கொடி ஏந்தியவாறு ஜம்மு முதல் கன்னியாகுமாரி வரை 4,000 கி.மீ தூரத்தை பயணிக்க கடந்த மார்ச் 7-ந் தேதி நடை பயணத்தை தொடங்கினார்.

    பல்வேறு மாநிலங்களின் வழியாக பயணித்து நேற்று ஓசூர் வழியாக தமிழகம் வந்தடைந்தார். மேலும், இந்த பயணத்தை கன்னியாகுமாரியில் நிறைவு செய்ய இருப்பதாகவும், பல்வேறு மாநிலங்களில் சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் தனக்கு உற்சாகமூட்டியதாகவும் அவர்கள் மத்தியில் பெண் கல்வி மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசியதாகவும், விக்ரம் கூறினார்.

    • மேயர் சத்யா, மாநகர அதிகாரிகளுடன், அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
    • அதிகாரிகள் பிரபாகரன் , ஸ்ரீகுமார் மற்றும் கட்சியினர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் ஆனந்த்நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில், அனைத்து பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மக்கா குப்பைகளை இங்கு அரவை செய்து பல்வேறு பணிகளுக்காக அனுப்பப்படுவது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள், அரவை எந்திரம் உள்ளிட்டவை தீயில் கருகி சேதமடைந்தன. இதையத்து, மாநகராட்சி மேயர் சத்யா, நேற்று மாநகர அதிகாரிகளுடன், அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, துணை மேயர் ஆனந்தையா , மண்டல தலைவர் அரசனட்டி ரவி, மாதேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், வெங்கடேஷ், மாநகராட்சி அதிகாரிகள் பிரபாகரன் , ஸ்ரீகுமார் மற்றும் கட்சியினர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • 7 ஆண்டுகள் சரிவர மழை பெய்யாததால் ஏரி வறண்டது.
    • சுடந்த ஒரு 10 நாள் முன்பு பெய்த தொடர் மழையால் குரள் தொட்டி சில தினங்களில் நிரம்பி வழிந்தது.

    சூளகிரி,

    சூளகிரி அருகே பெத்த சிகரளப் பள்ளி ஊராட்சியை சேர்ந்த குரள்தொட்டி கிராமத்தில் உள்ளது குரள்தொட்டி ஏரி.

    இந்த ஏரி நிரம்பினால் குறள்தொட்டி, தீண்ணுர், சிள்னதீண்ணுர், பாப்பனப் பள்ளி, கார்பாலா, ஆறுப்பள்ளி, மற்றும் ஆழ்துழைகிணறு , மற்றும் விவசாயம் வளம் பெறும்.

    ஆனால் 7 ஆண்டுகள் சரிவர மழை பெய்யாததால் ஏரி வறண்டது.இதனால் விவசாயிகள் மிகுந்த கஷ்டபட்டு வந்தனர்.

    சுடந்த ஒரு 10 நாள் முன்பு பெய்த தொடர் மழையால் குரள் தொட்டி சில தினங்களில் நிறம்பி வழிந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் ஒன்று கூடி பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து ஊர் வளமாக வந்து கிடா வெட்டி வழிபட்டு ஏரியில் தெப்பத்தேர் விட்டனர்.

    • போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்ற போது சின்னதாய் (வயது55) என்ற பெண் சட்டவிரோதமாக மதுவிற்றது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு மதுவிற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்ற போது சின்னதாய் (வயது55) என்ற பெண் சட்டவிரோதமாக மதுவிற்றது தெரியவந்தது. உடனே அந்த பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கைதான அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
    • ஓசூர் மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் ஷேர் ஆட்டோ முறையை அமல்படுத்த வேண்டும்

    ஓசூர்,

    இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஓசூர் மாநகர குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநகர செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் பழனி, மாதைய்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கட்சியின் மாநில தலைவர் பட்டாபி ராமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி, முன்னாள் மாநில துணை செயலாளர் எஸ். சுந்தரம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராமஜெயம் ( திருவண்ணாமலை), சங்கர் (திருப்பத்தூர்) ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மேலும் இதில், இந்திய இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் பாண்டு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், கட்சியினர், எப்.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், மத்திய மாநில அரசுகள் 6 மணிநேர வேலையை சட்டமாக்கி, 4 ஷிப்ட் முறையை கொண்டு வந்து கூடுதல் வேலைவாய்ப்பை வழங்க முன்வர வேண்டும், ஓசூர் மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் ஷேர் ஆட்டோ முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    • இவர் நேற்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார்.
    • இருசக்கர வாகனத்தை திருடியது கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 21 ) என்பது தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பெரியார் நகரை சேர்ந்தவர் பாலாஜிகுமார். கொல்லி தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார்.

    அந்த வண்டியை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் பாலாஜிகுமார் புகார் செய்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பாலாஜிகுமாரின் இருசக்கர வாகனத்தை திருடியது கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 21 ) என்பது தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் சத்தியமூர்த்தி மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளது தெரிய வந்தது.

    இதையடுத்து சத்திய மூர்த்தியிடம் விசாரணை நடத்தி அவர் திருடிய மேலும் 4 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    • அஞ்செட்டி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் ஷானிசா குளிக்க சென்றுள்ளார்.
    • சுயநினைவை இழந்த ஷானிசா நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியை சேர்ந்தவர் ஷானிசா (வயது 20).இவர் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று அஞ்செட்டி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விழுந்த ஷானிசாவின் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    இதனால் சுயநினைவை இழந்த அவர் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வ காளியம்மன் மற்றும் அனுமானுக்கு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து, பூக்களால் அலங்கரித்து சாமிக்கு மகா ஆராதனை நடந்தது.
    • சுற்றுவட்டார கிராம மக்கள் வருகை தந்து வழிபட்டனர்.

    சூளகிரி,

    சூளகிரி தாலுகா உத்தனபள்ளி ஊராட்சி பழைய கொத்தூர் சாலையில் உள்ளது பழமை வாய்ந்த செல்வ காளியம்மன் மற்றும் அனுமந்த ராய சுவாமி ஆலயம்.

    இங்கு புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையை முன்னிட்டு செல்வ காளியம்மன் மற்றும் அனுமானுக்கு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து, பூக்களால் அலங்கரித்து சாமிக்கு மகா மங்கள ஆரத்தி செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

    இந்த பூஜைகளை கோயில் தர்மகர்த்தா விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்தனர். சுற்றுவட்டார கிராம மக்கள் வருகை தந்து வழிபட்டனர்.

    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இதில் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் செல்வி தலைமையில் மருத்துவ குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்தனர் .

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் 478 நியாய விலைக்கடை விற்பணையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 23ம் தேதியில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் செல்வி தலைமையில் மருத்துவ குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்தனர் .

    இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவளர் ஏகாம்ப ரம், துணைப்பதிவாளர், ராஜதுரை மற்றும் துணைப்பதி வாளர், மேலாண்மை இயக்கு நர், கிருஷ்ணகிரி வட்ட மேலாண்மை உற்பத்தியாளர்கள், கூட்டுறவு விற்பனைசங்கம் சுந்தரம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

    • வெள்ளியம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அவர்களை கைது செய்த போலீசார் ரூ.400 பணம், 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகேயுள்ள வெள்ளியம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது முரளி(வயது 45), சேட்டு(46), மாதேஷ் (48), பிரபாகரன்(30 ), கோவிந்தன் (60), சுப்பிரமணியன் (60), சக்திவேல் (35) ஆகிய 8 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தபோது சிக்கினர்.

    அவர்களை கைது செய்த போலீசார் ரூ.400 பணம், 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    • ஏரி கரையோரத்தில் பன்றி, கோழி மற்றும் மீன் இறைச்சி கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.
    • அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது.

    ஓசூர் செப்.25-

    ஓசூர் மாநகராட்சி 10 வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேஷ் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள அலசநத்தம் ஏரி கரையோரத்தில் பன்றி, கோழி மற்றும் மீன் இறைச்சி கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் பல இடங்களில் சாக்கடைகள் மற்றும் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது.

    இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது.

    சுகாதார சீர்கேட்டால், வெங்கடேஷ் நகர் பகுதியில் தொற்று நோய்கள் பரவி வருகிறது. காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்புகளால் சிறுவர்கள், பெரியவர்கள் உள்பட ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கியுள்ளனர்.

    பாதிப்புக்குள்ளான பலர் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெங்கடேஷ் நகர் பகுதியில் பரவி வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும், சுகாதார சீர்கேடுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், ஒசூர் மாநாகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×