என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்"

    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
    • ஓசூர் மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் ஷேர் ஆட்டோ முறையை அமல்படுத்த வேண்டும்

    ஓசூர்,

    இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஓசூர் மாநகர குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநகர செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் பழனி, மாதைய்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கட்சியின் மாநில தலைவர் பட்டாபி ராமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி, முன்னாள் மாநில துணை செயலாளர் எஸ். சுந்தரம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராமஜெயம் ( திருவண்ணாமலை), சங்கர் (திருப்பத்தூர்) ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மேலும் இதில், இந்திய இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் பாண்டு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், கட்சியினர், எப்.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், மத்திய மாநில அரசுகள் 6 மணிநேர வேலையை சட்டமாக்கி, 4 ஷிப்ட் முறையை கொண்டு வந்து கூடுதல் வேலைவாய்ப்பை வழங்க முன்வர வேண்டும், ஓசூர் மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் ஷேர் ஆட்டோ முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    ×