என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கவுரம்மா தேவி கோயில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது,
    • அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று கோவில் திறக்கப்படும்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள கும்மளாபுரம் கிராமத்தில் வீரபத்திரசாமி கோவில் அருகில் உள்ள கவுரம்மா தேவி கோயில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது,

    ஆண்டு ஆண்டு காலமாக நவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் விநாயகர் மற்றும் கவுரம்மா தேவி தேர் திருவிழாவையொட்டி கடந்த வினாயகர் சதுர்த்தி நாளில் கோயில் திறக்கப்பட்டு நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன.

    நவராத்திரி முதல் நாளில் சிறப்பு யாகம் வளர்த்து பூஜைகள் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற திருவிழாவில் வினாயகர் மற்றும் கவுரம்மா தேவிக்கு தனிதனியாக தேர் அமைத்து 120 பேர் தேரை சுமந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் வந்தனர்.

    பிறகு அருகில் கவுரம்மா ஏரியில் முதலில் விநாயகரையும் பிறகு கவுரம்மா தேவி சிலைகளை தண்ணீரில் கரைத்தனர். இந்த கிராமத்துக்கு புராண காலத்திலிருந்து புகழ் உண்டு. இந்த கிராமத்தில் 101 ஏரிகள்,101 குளங்கள் ,101 கோயில்கள் , 101 வில்வமரம், உள்ள இடம் என்று புராணத்தில் உள்ளது என்று ஊர் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

    கவுரம்மா தேவி உருவத்தை களிமண்ணால் செய்து அலங்காரம் செய்து தங்கத்தாலி அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏரியில்தேவியின் களி மண் சிலையை மூழ்கடித்தனர்.

    மூன்று நாள் கழித்து அம்மன் தேவி சிலை கழுத்தில் இருந்த தங்கத்தாலி ஏரியில் மேலே மிதக்கும். இந்த தாலியை எடுத்து அம்மன் சன்னிதானத்தில் வைத்து கோயிலை பூட்டி விடுவது வழக்கமாகும். இத்திருவிழாவில் மாடாதிபதிகள் மற்றும் பல கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மீண்டும் கோயில் அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று கோவில் திறக்கப்படும்.

    • திருமண உதவித்தொகை ஆகிய திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
    • விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி நாள் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதியாகும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தொழி லாளர் நல நிதி செலுத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகளை பெறவிண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடாசலபதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலா ளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்க ளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்ப டுத்தி வருகிறது.

    தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ப்ரீ கே.ஜி முதல் பட்ட மேற்படிப்பு முடிய கல்வி உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு கல்வி ஊக்கத்தொகை, பாடநூல் உதவித்தொகை, உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள் வழங்குதல், தொழிற்பயிற்சி உதவித்தொகை, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிய, மாநில அளவில் விளையாட தகுதி பெறுவோருக்கு விளையாட்டு உதவித்தொகை, மாநில அளவில் வெற்றி பெற்ற வர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலிடம் முதல் மூன்றாமிடம் வரை பரிசுத்தொகை வழங்குதல், தையல் இயந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை, தொழிலாளிக்கு மூக்கு கண்ணாடி வாங்குவதற்கு உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, மேலும் தொழிலாளி மற்றும் அவர்களை சார்ந்த வர்களுக்கு திருமண உதவித்தொகை ஆகிய திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நலத்திட்டங்களில் பயனடைய தொழிலா ளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது. தொழிலா ளியின் மாத ஊதிய உச்ச வரம்பு அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்ந்து ரூ.25 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தொழிலாளர்களிடமிருந்து கல்வி சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி நாள் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதியாகும். மேலும் விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரியிலோ அல்லது இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தொலைபேசி எண்.044-24321542 மற்றும் செல்போன் எண்.8939782783 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு வேலையளிப்போர் மற்றும் தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சாலை மலை மீது செல்வது போல ஏற்ற இறக்கமாக செல்லும்.
    • சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி சூளகிரி, வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் மேலுமலை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலுமலை முதல், கனவாய், எண்ணகோள்புதூர் வரையிலான 3 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சாலை மலை மீது செல்வது போல ஏற்ற இறக்கமாக செல்லும்.

    இந்த சாலையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலை பல்வேறு மாநிலங்களுக்கும் செல்லலாம்.

    இந்த நிலையில் மேலுமலை சாலை இருள் சூழ்ந்த பகுதி என்பதால் வெளிச்சம் இல்லாமல் அவதிபடுகின்றனர். வாகனங்கள் மிகவும் குறைந்த வேகத்தில் செல்வதால் கொள்ளையர்கள் வழிமறித்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதும் நடைபெற்று வருகிறது.

    இதனால் இந்த சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நவீன மின்விளக்குகள், சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • அதே குழியில் உட்கார்ந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
    • லட்சுமணனின் உடலில் எந்த காயங்களும் இல்லை.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள பொம்மதாதனூர் ஊராட்சி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50). தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு நாகராஜ் (24), சிவகுமார் (22) என்ற மகன்களும், தனலட்சுமி (20) என்ற மகளும் உள்ளனர். லட்சுமணன் நேற்று தனது வீட்டின் அருகே உள்ள வெற்றிலை தோட்டத்தில் புதையலு க்காக சுமார் 1½ அடி உயரம் குழி தோண்டினார். அதில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை வைத்து பூஜை செய்துள்ளார். மேலும் கோழியை பலியிட்டு வழிபாடு நடத்தினர். பூஜை செய்த சிறிது நேரத்திலேயே அவர் அதே குழியில் உட்கார்ந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

    இது குறித்து கெலமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெ க்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமணன் குடும்ப த்தினரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது நேற்று முன்தினம் புதையல் இருப்பதாக கூறி தோட்டத்திற்கு லட்சுமணன் சென்றார். அங்கு அவருடன் ஒருவர் இருந்தார். ஆனால் அவர் தற்போது தலை மறைவாகி விட்டார் என்றனர்.

    லட்சுமணனின் உடலில் எந்த காயங்களும் இல்லை. இதனால் அவர் உடன் இருந்தவரை பிடித்தால் தான் முழுவிபரம் ெதரிய வரும்.அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து லட்சுமணன் நரபலி கொடுக்கப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 27-ந்தேதி அன்று அஜித்தின் வீட்டிற்குள் மர்ம நபர்கள் 3 பேர் புகுந்தனர்.
    • 34 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு என மொத்தம் 57 ஆயிரம் பணம் ஆகியவை திருடிவிட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அருகே ஓசூர்-கெலமங்கலம் சாலையில் கேரளா மாநிலம், வாலியவரம்பு பகுதியை சேர்ந்த அஜித் (வயது27) என்பவர் கார்மெண்ஸ் நடத்தி வருகிறார். இந்த கடையின் அருகே அவரும் வசித்து வந்தார்.

    கடந்த 27-ந்தேதி அன்று அஜித்தின் வீட்டிற்குள் மர்ம நபர்கள் 3 பேர் புகுந்தனர். அங்கு அவரிடம் இருந்து 34 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு என மொத்தம் 57 ஆயிரம் பணம் ஆகியவை திருடிவிட்டனர். மேலும் விலையுயர்ந்த சாம்சங் டேப், மொபைல் என 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களையும் திருடிவிட்டனர். பின்னர் அஜித்தை சரமாரியாக அந்த நபர்கள் தாக்கியுள்ளனர்.

    இது குறித்து அஜித் மத்திகிரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயர்மின் அழுத்த கம்பி எதிர்பாராதவிதமாக மணிகண்டன் மீது பட்டதால் மின்சாரம் பாய்ந்தது.
    • இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கொடமாண்டப்பட்டி பகுதியில் முருகன் என்பவரது தோப்பில் மாதம்பதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்றுகாலை தேங்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது மரத்தின் அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பி எதிர்பாராதவிதமாக மணிகண்டன் மீது பட்டதால் மின்சாரம் பாய்ந்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்த மணிகண்டன் உறவினர்கள் விரைந்து வந்து உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர்.

    தொடர்ந்து இதே போல் பல இடங்களில் உயர்மின்அழுத்த கம்பி தாழ்வாக செல்வதால் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. இதனால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வைத்து போராட்டம் செய்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தியவர்களின் கோரிக்கையை விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் இன்றுகாலை அந்த பகுதியில் பெரும்பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், செயலாளர் மதியழகன், துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி, கடலரசு மூர்த்தி, பொருளாளர் கதிரவன், நியமனம்.
    • கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவை தலைவர் யுவராஜ், செயலாளர் பிரகாஷ், துணை செயலாளர்கள் முருகன் நியமனம்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தல் பேரூர், ஒன்றிய, பகுதி, நகர, மாநகர, மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகள் விபரம் வெளியிட்டுள்ளார்.

    அதன் விபரம் வருமாறு:-

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், செயலாளர் மதியழகன், துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி, கடலரசு மூர்த்தி, பொருளாளர் கதிரவன்,

    தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பரிதாநவாப், பாலன், சாமிநாதன், நாகராசன், கோதண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லம் ரஹ்மான் ஷெரிப், சித்ரா சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் ஊத்தங்கரை வடக்கு குமரேசன், தெற்கு ரஜினிசெல்வம், மத்திய செல்வராஜ், மத்தூர் வடக்கு வசந்தரசு, தெற்கு நரசிம்மன், கிருஷ்ணகிரி கிழக்கு ேகாவிந்தன், மேற்கு தனசேகரன், பர்கூர் வடக்கு ராஜேந்திரன், தெற்கு அறிஞர், போச்சம்பள்ளி சாந்தமூர்த்தி, காவேரிப்பட்ட ணம் கிழக்கு மகேந்திரன், மேற்கு சுப்பிரமணி,

    நகர செயலாளர் கிருஷ்ணகிரி நவாப், பேரூர் கழக செயலாளர்கள் நாகரசம்பட்டி தம்பிதுரை, காவேரிப்பட்டணம் பாபு, பர்கூர் வெங்கட்டப்பன், ஊத்தங்கரை சிவக்குமார் ஆகியோரை நியமனம் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவை தலைவர் யுவராஜ், செயலாளர் பிரகாஷ், துணை செயலாளர்கள் முருகன், சின்னசாமி, புஷ்பாசர்வேஷ், பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, வீரா, கிரிஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், முனிராஜ், சீனிவாசன், அப்துல்கலாம், தனலட்சுமி, அருணாபூசன்குமார், ஒன்றிய செயலாளர்கள் வேப்பனப்பள்ளி கிழக்கு கருணாகரன், மேற்கு ரகுநாத், சூளகிரி வடக்கு நாகேஷ், தெற்கு பாக்கியராஜ், கெலமங்கலம் கிழக்கு சின்ராஜ், மேற்கு ஸ்ரீதர், அஞ்செட்டி தனிகாசலம், ஓசூர் கஜேந்திரமூர்த்தி, தளி வடக்கு ஸ்ரீனிவாசலு, தெற்கு திவாகரன், பேரூர் செயலாளர்கள் தேன்கனிக்கோட்டை சீனிவாசன், கெலமங்கலம் தஸ்தகீர், ஓசூர் மாநகர அவை தலைவர் செந்தில்குமார், செயலாளர் சத்யா, துணை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், ரவிக்குமார், சாந்தி, பொருளாளர் தியாகராஜ், பகுதி கழக செயலாளர்கள் ஓசூர் கிழக்கு ராமு, மேற்கு ஆனந்தய்யா, வடக்கு வெங்கடேஷ், தெற்கு திம்மராஜ்,

    • அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
    • இதில் பாலமுருகன் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஓசூர்,

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது21), மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயித் (22) இவர்கள் இருவரும் ஓசூர் 2-வது சிப்காட் பகுதியில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் கடந்த 6 மாதமாக தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.

    இரவு பணி முடித்து இன்று அதிகாலை 3 மணிக்கு மோட்டார் சைக்கிளில் ஓசூர் நோக்கி சென்றனர். அப்போது பத்தலபள்ளி வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

    இதில் பாலமுருகன் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பலத்த காயமடைந்த ஜெபித்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஓசூர் இரயில் நிலையத்திற்கு வந்த இளம் பெண்களை டாடா கம்பெனி நிர்வாகத்தினர் அங்கிருந்து அழைத்து சென்றனர்.
    • அதிகாலை நேரத்தில் சிறப்புரெயிலில் 800-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் ஒரே நேரத்தில் வந்து இறங்கியதால் ரயில் நிலையம் காலை நேரத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற செல்போன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது.

    இந்த கம்பெனியில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ் டூ படித்த உள்ளூர் மற்றும் வெளியூர் இளம் பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

    தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது வட மாநில இளம் பெண்களும் வேலைக்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் இந்த கம்பெனியில் பணியாற்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 860 வட மாநில இளம் பெண்கள் சிறப்பு இரயில் மூலம் இன்று ஓசூருக்கு அழைத்து வரப்பட்டனர்.

    ஜார்கண்ட் மாநிலம் ஹடியா இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறப்பு ெரயில் இன்று அதிகாலை ஓசூர் ெரயில் நிலையத்தை வந்தடைந்தது.

    மொத்தம் உள்ள 20 ரயில் பெட்டிகளில் 10 பெட்டிகளில் இளம் பெண்கள் பயணம் செய்து வந்தனர். ஓசூர் இரயில் நிலையத்திற்கு வந்த இளம் பெண்களை டாடா கம்பெனி நிர்வாகத்தினர் அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    அதிகாலை நேரத்தில் சிறப்பு ெரயிலில் 800-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் ஒரே நேரத்தில் வந்து இறங்கியதால் ெரயில் நிலையம் காலை நேரத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    தொடர்ந்து அனைவரும் தனியார் பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்டு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு அதன் பின்னர் டாடா கம்பெனிக்கு வரும் 1 ஆம் தேதி முதல் பணிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    தமிழகத்தில் ஏராளமான அரசுத்துறை வேலைவாய்ப்பில் வட மாநிலத்தவர் புகுந்து வரும் நிலையில் தனியார் வேலை வாய்ப்புகளிலும் வட மாநிலத்தவர்கள் அமர்த்தப்படுவது உள்ளூர் மக்களை மட்டுமின்றி தமிழக மக்களை வேதனைடையை செய்துள்ளது.

    • 30 டன் அளவிலான மருது, தேக்கு மற்றும் இலுப்பை மரங்கள் வாங்கப்பட்டன.
    • முன்னதாக, மலைக்கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் போது சந்திரசூடேஸ்வர சாமியை அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரிலும், மரகதாம்பிகை அம்மனை சிறிய தேரிலும் வைத்து பக்தர்கள் தேரை இழுத்துச் செல்வார்கள்.

    இந்த நிலையில், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் தேர் பழுதடைந்ததால், புதிதாக சிறிய தேர் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. தேர் அமைக்கும் பணிக்காக, 30 டன் அளவிலான மருது, தேக்கு மற்றும் இலுப்பை மரங்கள் வாங்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து, புதிய தேர் அமைக்கும் பணி, ஓசூர் தேர்பேட்டையில் , நேற்று ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், சந்திரசூடேஸ்வரர் தேர் கமிட்டி தலைவருமான மனோகரன் தலைமையில் தொடங்கியது. முன்னதாக, மலைக்கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.

    பின்னர், ஸ்தபதி மற்றும் அவரது குழுவினருக்கு மரியாதை செய்யப்பட்டது. மேலும் இதில், கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி, மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் நாகராஜ், மற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள், ஊர் கவுண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதிய தேர் அமைக்கும் பணியில், திருவாரூரை சேர்ந்த ஸ்தபதி இளவரசன் தலைமையில் 12 பேர் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 3 மாதத்தில் புதிய தேர் அமைக்கும் பணி நிறைவடையும் என தெரிவித்தனர்.

    • சாலையில் செல்வோரை விரட்டி வருவதால் கீழே விழுந்து மரணம் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது.
    • சில மாதங்களாக நாய்களின் இன பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிக பெண் நாய்கள் பிரசவத்திற்கு தயாராக உள்ளது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா சூளகிரி ஒன்றியத்தில் சூளகிரி, அத்தி முகம், பேரிகை, உத்தனப்பள்ளி, காமன்தொட்டி, மேலுமலை, காளிங்காவரம், பேரண்டப்பள்ளி மற்றும் சுற்று வட்டரங்களில் கடந்த பல மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சாலையில் செல்வோரை விரட்டி வருவதால் கீழே விழுந்து மரணம் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள், பொதுமக்கள் வணிக வளாகங்கள் தொழில்சாலைகளுக்கு தெரு வீதிகளில் செல்லும் போது நாய்கள் சாலைகளில், அங்கும் இங்கும் ஓடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    சில மாதங்களாக நாய்களின் இன பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிக பெண் நாய்கள் பிரசவத்திற்கு தயாராக உள்ளது. மேலும் நாய்கள் அதிகரித்தால் கட்டுபடுத்துவது எப்படி என பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • கணபதி ஹோமம், சுதர்சன ஹோமங்கள் நடந்தன.
    • சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை பட்டாளம்மன் கோவில் 48&வது நாள் மண்டல பூஜை மற்றும் 108 சங்கு அபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை விக்னேஸ்வர பூஜை, 108 சங்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம், சுதர்சன ஹோமங்கள் நடந்தன.

    தொடர்ந்து மாங்கல்ய ஹோமம், நவக்கிரஹ ஹோமங்கள் நடந்தன.

    தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பால் குட ஊர்வலம் நடந்தது. இதையொடடி ஏராளமான பெண் பக்தர்கள் பால்குடம் சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பட்டாளம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் பழையபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×