என் மலர்
கிருஷ்ணகிரி
- தட்ரஅள்ளி நாகராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அண்ணா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.
கிருஷ்ணகிரி,
தி.மு.க.,வின், 15வது உட்கட்சி தேர்தல் முடிந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக, மாநில தி.மு.க. விவசாய அணி துணை தலைவரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் தேர்வானார்.
சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வந்த அவருக்கு மாவட்ட எல்லையான பர்கூர் அடுத்த ஒப்பதவாடியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேளதாளங்கள் முழங்கவும், ஆளுயர மாலை அணிவித்தும் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், கிருஷ்ணகிரி, 5 ரோடு ரவுண்டானா அருகே உள்ள அண்ணா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.
தொடர்ந்து பெங்களூரு சாலை வழியாக திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
- கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தகுதியுள்ள அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
பயிர் கடனாக தனிநபர் பிணையத்தின் பேரில் ரூ.1.60 லட்சம் வரையிலும், அடமானத்தின் அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை 8,987 விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.75 கோடியே 53 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிர்க்கடன் வழங்க ஆண்டு குறியீடாக ரூ.220 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, பயிர்கடன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
எனவே, விவசாயிகள் நில உடைமை சிட்டா, அடங்கல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பான் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான போட்டோ ஆகிய ஆவணங்களுடன், தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை அளித்து, உறுப்பினராக சேர்ந்து வட்டியில்லா பயிர்க்கடன் பெற்று பயன் பெறலாம்.
மேலும், வட்டியில்லா கால்நடை பராமரிப்புக்கடன், மாற்றுத்திறனாளிகளக்கு வட்டியில்லா கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், விவசாயம் சார்ந்த மத்திய காலக் கடன்கள் போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி கூட்டுறவுத்துறையின் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆளுயர மாலை அணிவித்தும் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
- அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி,
தி.மு.க.,வின், 15வது உட்கட்சி தேர்தல் முடிந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக, மாநில தி.மு.க. விவசாய அணி துணை தலைவரும், பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன் தேர்வானார். சென்னையில் இருந்து கார் மூலம் கிருஷ்ணகிரி வந்த அவருக்கு மாவட்ட எல்லையான பர்கூர் அடுத்த ஒப்பதவாடியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்கவும், ஆளுயர மாலை அணிவித்தும் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், கிருஷ்ணகிரி, 5 ரோடு ரவுண்டானா அருகே உள்ள அண்ணா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.
தொடர்ந்து பெங்களூரு சாலை வழியாக திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நகர செயலாளர் எஸ்.கே.நவாப் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பரிதா நவாப், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், சாமிநாதன், நாகராஜன், கோதண்டன், அஸ்லம் ரஹ்மான் ஷெரீப், சித்ரா சந்திரசேகர், ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளருமான குமரேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினிசெல்வம், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, நகர அவைத் தலைவர் தணிகை குமரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் காளிதாஸ், ஊத்தங்கரை ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கலீல் (மகனூர்பட்டி), மணிகண்டன் (கீழ்மத்தூர்), ஜெயமணிதிருப்பதி (கீழ்குப்பம்), பூபாலன் (மூன்றம்பட்டி), கல்லாவி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- ஒப்படைக்குமாறு, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கேட்டுக் கொண்டார்.
- ஒலி பெருக்கி மூலம் மற்றும் பேர்கள் பேரணிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள வன உயிரினங்கள் மற்றும் யானைகளையும் கள்ள நாட்டு துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடுவதை தடுக்கும் பொருட்டு, கள்ள நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அதனை தாமாக முன்வந்து வனத்துறை அலுவலர்களிடமோ அல்லது ஊர் முக்கி யஸ்தர்களிடமோ ஒப்படைக்குமாறு, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கேட்டுக் கொண்டார்.
அதனடிப்படையில், ஓசூர் தேன்கனிகோட்டை, அஞ்செட்டி ,உரிகம், ஜவளகிரி, ராயக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி போன்ற 7 வனச்சரகங்களிலும் உள்ள அனைத்து வன அலுவலர்களும், யானைகள், இதர உயிரினங்கள் மற்றும் வனத்தின் முக்கியத்துவம், மற்றும் பாதுகாப்பதை அவசியம் குறித்தும் மலை கிராமங்கள் மற்றும் காப்புக்காடுகளை சுற்றியுள்ள கிராமங்களில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும், திண்ணை பிரச்சாரம், ஒலி பெருக்கி மூலம் மற்றும் பேர்கள் பேரணிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதன் விளைவாக, வனப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து ஊர் முக்கியஸ்தர்கள் மூலம் மற்றும் ஆங்காங்கே புதரில் மறைத்து வைத்து சென்றிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலும், 111 கள்ள நாட்டு கைப்பற்றப்பட்டன. இந்த 111 துப்பாக்கிகளையும், நேற்று மாவட்ட வன உயிரின காப்பாளர் அலுவலகத்தில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோரிடம் ஒப்படைக்க ப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் யாரேனும் கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருந்து வனத்துறையில் கண்டு பிடிக்கப்பட்டால் அல்லது பயிற்சி அளிக்கப்பட்ட மோப்பநாய் படைகள் மூலம் சோதனை செய்து கண்டிப்ப ட்டாலோ வழக்கு கள் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரி க்கப்பட்டது.
- செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
- வெவ்வேறு வங்கி கணக்குகளில் இந்த பணத்தை செலுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 70). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த ஜூன் மாதம் இவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் நாகப்பனின் இடத்தில் செல்போன் டவர் அமைக்க உள்ளதாகவும் ,இதற்காக பல்வேறு பணிகளுக்காக ரூ.14 லட்சத்து 26 ஆயிரம் செலவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதை நம்பிய நாகப்பன் வெவ்வேறு வங்கி கணக்குகளில் இந்த பணத்தை செலுத்தியுள்ளார்.
ஆனால் செல்போன் எண்ணை நாகப்பனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகப்பன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து மோசடி ஆசாமியை தேடி வருகிறார்.
- சுமார் 5,600 மாமரங்களை வைத்து வளர்த்து வருகிறார்.
- ஊராட்சி சொத்தாக மாற்றி தருமாறு ஊர் பொதுமக்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.
காவேரிப்பட்டினம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம். சௌட்டஅள்ளி ஊராட்சியில் உள்ள ராமர்பட்டிணம் கிராமத்தில் தனிநபர் அரசாங்கத்திற்கு சொந்தமான காடுகளை அழித்து சுமார் 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த நிலத்தில் சுமார் 5,600 மாமரங்களை வைத்து வளர்த்து வருகிறார்.
இது சம்மந்தமாக சௌட்டஅள்ளி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலக அலுவலர், வட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட வன அலுவலர் மற்றும் கலெக்டர் ஆகியோரிடம் கிராம பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இனியாவது காலம் தாழ்த்தாமல் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் உள்ள பலன் தரும் மரங்களை சௌட்டஅள்ளி ஊராட்சியின் வளர்ச்சிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊராட்சி சொத்தாக மாற்றி தருமாறு ஊர் பொதுமக்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் கூறுகையில், தனிநபர் ஆக்கிரமிப்பு உன்மைதான். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கிராம சபையில் தீர்மானம் வைக்கப்பட்டது. ஆனால் இந்நாள் வரை தீர்த்து வைக்கப்படவில்லை. எனவே கலெக்டர் இக்கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் சார்பாக கேட்டுக்கொண்டார்.
- தொழில் முனைவோர் வழிகாட்டுக் கருத்தரங்கினை நடத்தின.
- பல வேலை வாய்ப்புகள் பெற்று மக்கள் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளனர்.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை, அக, தர மதிப்பீட்டுக் குழு மற்றும் தொழில் முனைவோர் மன்றம் ஆகியவை இணைந்து தொழில் முனைவோர் வழிகாட்டுக் கருத்தரங்கினை நடத்தின.
கல்லூரியின் கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ,எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர்முத்துமணி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மாணவர்களிடம் வேலை தேடி செல்லாமல், பிறருக்கு வேலை கொடுக்கின்றவர்களாக இருக்கவேண்டும் என்றார். மேலும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் தொழில் செய்பவர்களுக்கு வெற்றியைத் தரும் என்று கூறி மாணவர்கள் தொழிலதிபர்களாக உருவாக வேண்டும் என வாழ்த்திப் பேசினார்.
கருத்தரங்கில், ஓசூர் ஐசோஜெட் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டாக்டர் கே. ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில். தொழில் அதிபர்களை எதிர்பார்த்து இந்த சமூகமும், அரசும் இருக்கின்றது. அரசு கொடுக்க முடியாத வேலைவாய்ப்பைத் தொழில் அதிபர்கள், தந்து கொண்டிருக்கின்றனர். இதனால் பல வேலை வாய்ப்புகள் பெற்று மக்கள் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளனர். இதற்கு தொழில் அதிபர்கள்தான் காரணம். எனவே மாணவர்கள் ஒவ்வொருவரும் தொழில் அதிபர்களாக வரவேண்டும் என மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
இந்த கருத்தரங்கை, தொழில்முனைவோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் ஏற்பாடு செய்திருந்தார். இதில், பிற துறை பேராசிரியர்களும், 200 க்கும் மேற்பட்ட மாணவர்களும் பங்கேற்றனர். முன்னதாக வணிக நிர்வாகவியல் துறை தலைவர் மஞ்சுநாத் வரவேற்றார்.
முடிவில் வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.
- கிருஷ்ணகிரிக்கு வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
- மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதியழகன் எம்.எல்.ஏ. இன்று கிருஷ்ணகிரிக்கு வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
இது குறித்து ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணி துணைத் தலைவருமான டி.மதியழகன் தேர்ந்தெடுக்கப ்பட்டுள்ளார். மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று முதல் முறையாக அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று வருகை தருகிறார்.
சென்னையில் இருந்து கார் மூலம் வரும் அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒப்பதவாடி கூட்டு ரோட்டில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி வரும் அவர் புதிய பஸ் நிலையம், 5 ரோடு ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
எனவே இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளிலும், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளிலும் ஊத்தங்கரை ஒன்றியம் மற்றும் நகரத்திலுள்ள கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உஷா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
- போலீசார் விரைந்து சென்று காரை மடக்கி அஜித்குமாரை மீட்டனர்.
கிருஷ்ணகிரி,
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள பள்ளிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஐ .டி . நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவருக்கும் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் உஷா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
உஷா தற்போது காவேரிப்பட்டினத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பர்கூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் உஷாவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அவரிடம் அஜித்குமார் குடித்துவிட்டு வந்து தனக்கு தொந்தரவு தருவதாக உஷா கூறியுள்ளார். இதையடுத்து உஷாவை பார்க்க வந்த அஜித்குமாரை ஆறுமுகம் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி சென்றார்.
இதைக்கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காவேரிப்பட்டினம் போலீசார் விரைந்து சென்று காரை மடக்கி அஜித்குமாரை மீட்டனர். ஆறுமுகம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- அரசுக்கு சொந்தமாக மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலம் உள்ளது.
- கிராம மக்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், ஒட்டப்பட்டி ஊராட்சியில் உள்ள புளியாண்டப்பட்டி மாதம்பதி உள்ளிட்ட கிராமங்களுக்கு மத்தியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமாக மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் அடர்ந்த காட்டு கருவேல மரங்கள் வளர்ந்து இருக்கும் நிலையில் இந்த புறம்போக்கு நிலத்தில் பட்டா மாற்றத்தின் பொழுது புளியாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த அலமேலு முருகேசன் என்பவருக்கு 3,1/2 ஏக்கர் நிலம் தவறுதலாக வழங்கப்பட்டுள்ளது.அந்த பட்டா வழங்கப்பட்டுள்ள இடத்தில் நீர்நிலை குட்டை இருப்பதாகவும் இதுகுறித்து பல்வேறு துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் கவனத்தில் கொண்டு சென்று மனு அளித்த நிலையில் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கக் கூடாது என்றும் நீர்நிலை, காடு, வனங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் புளியாண்டப்பட்டி, மாதம்பதி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இருந்தனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்காத நிலையில் உடனடியாக கிராம மக்கள் போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போச்சம்பள்ளி வட்டாட்சியர் திலகத்திடம் கேட்டபோது இந்த நிலம் யூடிஆர் பட்டா வழங்கும் பொழுது தவறுதலாக வழங்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறி உள்ளனர். அது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிலம் குறித்து சென்னை ஆவணக்காப்பகத்தில் அதற்குண்டான ஆவணங்களை கேட்டுள்ளோம். அந்த ஆவணங்கள் அடிப்படையில் கிராம மக்கள் கூறுவது போல் இருந்தால் அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்களிடம் விளக்கம் பெற்றவுடன் மேற்கண்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என்று உறுதி அளித்தார்.
- மின்சாரம் பற்றாக்குறை இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
- அசோக்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் குருபரப்பள்ளி அருகில் உள்ள கங்கசந்திரம் கிராமத்தில் 150 வீடுகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக மின்சாரம் பற்றாக்குறை இருப்பதாக அப்பகுதி மக்கள்
புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி அ.தி.மு.க.,
எம்.எல்.ஏ., அசோக்குமாரின் அறிவுறுத்தலின் பேரில், கங்கசந்திரம் கிராமத்தில் 63 கே.ஏ.வி., டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மரை நேற்று காலை அசோக்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஆஞ்சலா சகாயமேரி, உதவி பொறியாளர் சரவணன், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், வேப்பனஹள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன், குருபரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, கவுன்சிலர் திம்மராஜ், பாசறை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், கார்த்திக் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பதி கோவிலில் இருந்து செய்யப்பட்டு பென்றஹள்ளி கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது.
- ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அரசம்பட்டி ஊராட்சி பென்றஹள்ளி கிராமத்திற்கு பெரியசாமி ஆலய மூலவர் சிலை திருப்பதி கோவிலில் இருந்து செய்யப்பட்டு பென்றஹள்ளி கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது.
இதைதொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் தலைமையில் மேல தாளத்துடன் பட்டாசு வெடித்து ஊர்வலமாக வந்து பென்றஹள்ளி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் வீட்டு முன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் குட்டால்( எ) பெரியண்ணன். தர்மகர்த்தா ராமலிங்கம், நிர்வாகிகள் சங்கர், மற்றொரு சங்கர், வையம்பட்டி முனுசாமி, பில்ல கொட்டாய் மாது, செல்வம், பெரியசாமி, வனத்தூர் முனுசாமி, பள்ளத்தூர் செல்வம், வையம்பட்டி சரவணன், ரஜினி மற்றும் பூசாரிகள் பெரியசாமி, அர்ஜுனன், வேலன், வெங்கட்ராமன், சபரி, மாரியப்பன் உள்பட ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






