என் மலர்
நீங்கள் தேடியது "தொழில் முனைவோர் வழிகாட்டு கருத்தரங்கம்"
- தொழில் முனைவோர் வழிகாட்டுக் கருத்தரங்கினை நடத்தின.
- பல வேலை வாய்ப்புகள் பெற்று மக்கள் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளனர்.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை, அக, தர மதிப்பீட்டுக் குழு மற்றும் தொழில் முனைவோர் மன்றம் ஆகியவை இணைந்து தொழில் முனைவோர் வழிகாட்டுக் கருத்தரங்கினை நடத்தின.
கல்லூரியின் கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ,எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர்முத்துமணி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மாணவர்களிடம் வேலை தேடி செல்லாமல், பிறருக்கு வேலை கொடுக்கின்றவர்களாக இருக்கவேண்டும் என்றார். மேலும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் தொழில் செய்பவர்களுக்கு வெற்றியைத் தரும் என்று கூறி மாணவர்கள் தொழிலதிபர்களாக உருவாக வேண்டும் என வாழ்த்திப் பேசினார்.
கருத்தரங்கில், ஓசூர் ஐசோஜெட் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டாக்டர் கே. ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில். தொழில் அதிபர்களை எதிர்பார்த்து இந்த சமூகமும், அரசும் இருக்கின்றது. அரசு கொடுக்க முடியாத வேலைவாய்ப்பைத் தொழில் அதிபர்கள், தந்து கொண்டிருக்கின்றனர். இதனால் பல வேலை வாய்ப்புகள் பெற்று மக்கள் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளனர். இதற்கு தொழில் அதிபர்கள்தான் காரணம். எனவே மாணவர்கள் ஒவ்வொருவரும் தொழில் அதிபர்களாக வரவேண்டும் என மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
இந்த கருத்தரங்கை, தொழில்முனைவோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் ஏற்பாடு செய்திருந்தார். இதில், பிற துறை பேராசிரியர்களும், 200 க்கும் மேற்பட்ட மாணவர்களும் பங்கேற்றனர். முன்னதாக வணிக நிர்வாகவியல் துறை தலைவர் மஞ்சுநாத் வரவேற்றார்.
முடிவில் வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.






