என் மலர்
நீங்கள் தேடியது "மதியழகன் எம்.எல்.ஏ. இன்று கிருஷ்ணகிரி வருகை"
- கிருஷ்ணகிரிக்கு வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
- மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதியழகன் எம்.எல்.ஏ. இன்று கிருஷ்ணகிரிக்கு வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
இது குறித்து ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணி துணைத் தலைவருமான டி.மதியழகன் தேர்ந்தெடுக்கப ்பட்டுள்ளார். மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று முதல் முறையாக அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று வருகை தருகிறார்.
சென்னையில் இருந்து கார் மூலம் வரும் அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒப்பதவாடி கூட்டு ரோட்டில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி வரும் அவர் புதிய பஸ் நிலையம், 5 ரோடு ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
எனவே இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளிலும், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளிலும் ஊத்தங்கரை ஒன்றியம் மற்றும் நகரத்திலுள்ள கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






