search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி சுற்று வட்டாரங்களில்  நாய்கள் தொல்லை அதிகரிப்பு
    X

    அத்திமுகம் பகுதி சாலையில் நாய்கள் வளம் வரும் காட்சி.

    சூளகிரி சுற்று வட்டாரங்களில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

    • சாலையில் செல்வோரை விரட்டி வருவதால் கீழே விழுந்து மரணம் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது.
    • சில மாதங்களாக நாய்களின் இன பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிக பெண் நாய்கள் பிரசவத்திற்கு தயாராக உள்ளது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா சூளகிரி ஒன்றியத்தில் சூளகிரி, அத்தி முகம், பேரிகை, உத்தனப்பள்ளி, காமன்தொட்டி, மேலுமலை, காளிங்காவரம், பேரண்டப்பள்ளி மற்றும் சுற்று வட்டரங்களில் கடந்த பல மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சாலையில் செல்வோரை விரட்டி வருவதால் கீழே விழுந்து மரணம் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள், பொதுமக்கள் வணிக வளாகங்கள் தொழில்சாலைகளுக்கு தெரு வீதிகளில் செல்லும் போது நாய்கள் சாலைகளில், அங்கும் இங்கும் ஓடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    சில மாதங்களாக நாய்களின் இன பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிக பெண் நாய்கள் பிரசவத்திற்கு தயாராக உள்ளது. மேலும் நாய்கள் அதிகரித்தால் கட்டுபடுத்துவது எப்படி என பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×