என் மலர்
கிருஷ்ணகிரி
- பேனர்கள் வைப்பதற்கு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
- கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:& கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது இடங்களில் அனைத்து வகையான பேனர்கள் வைப்பதற்கு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்சமயம் ஆங்காங்கே, அவ்வப்போது பேனர்கள் வைத்த வண்ணம் உள்ளனர். மேலும், பேனர்கள் தயார் செய்து பொருத்தும் நிறுவனத்தினரும் பொது இடங்களில் பேனர்களை நிறுவி வருகின்றனர்.இனி வரும் காலங்களில் கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் பேனர்கள் வைக்கும் நடவடிக்கைகள் யாரும் ஈடுபடக்கூடாது. இதனை மீறுவோர்கள் மீது நகராட்சிகள் சட்டம் 1920&ன் கீழ் கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக அனைத்து பேனர்கள் தயாரிக்கும் மற்றும் பொருத்தும் நிறுவனங்களும் இவ்விதமான நட வடிக்கைகளை தவிர்க்கு மாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- ஆம்னி பஸ்சில் குட்கா மதுரைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்இ-ன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் கடந்த 7-ந் தேதி ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தனியார் பஸ் ஒன்று பெங்களுருவில் இருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பஸ்சில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்டவை மொத்தம் 500 கிலோ கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.
அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கொண்டு வந்தததாக தனியார் டிராவல்ஸ் பஸ்சின் டிரைவரான கர்நாடக மாநிலம் பெங்களூரு பிரகாஷ் நகரை சேர்ந்த ரஞ்சித் (வயது 28), பெங்களூரு பீஜ்பூர் பசந்த் பாத்தியா பகுதியை சேர்ந்த பாபு (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு சென்ற தனியார் ஆம்னி பஸ்சில் குட்கா மதுரைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
- அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தர்கள் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த மாதம் 18&ந் தேதி தொடங்கியது. நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி கனவாய்ப்பட்டி வெங்கட்ரமணசாமி கோவில், காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள பெருமாள் சன்னதி, பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோவில், பொன்மலை சீனிவாச பெருமாள், பாளேகுளி அனுமந்தராய சாமி, கிருஷ்ணகிரி மலையப்ப சீனிவாச பெருமாள், தம்மண்ண நகர் வெங்கடேச பெருமாள், கிருஷ்ணா கோவில் தெரு நவநீத வேணு கோபால சாமி, பாப்பாரப்பட்டி வேணுகோபால் சாமி கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். அதே போல கனவாய்ப்பட்டி பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் மொட்டை போட்டுக் கொண்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
நேற்று 3-வது புரட்டாசி சனி என்பதால் வழக்கத்தை காட்டிலும் அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் வீடுகளிலும் காலையிலேயே பொதுமக்கள் குளித்து, பெருமாளை வழிபட்டனர். இதே போல கடைவீதிகளிலும் பூஜை பொருட்கள் விற்பனை அதிகமாக இருந்தது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
- முதல்வர் லீனா ஜோஸ் மாணவர் பேரவையின் உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.
- நிகழ்ச்சிகளை மாணவிகள் கார்த்திகா ஸ்ரீ மற்றும் அன்யதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் பேரவையின் பதவியேற்பு விழா அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், பேராசிரியர் முனைவர் சீனி திருமால்முருகன் தலைமையில் நடைபெற்றது.
அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் முனைவர் ஷோபா திருமால்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர் பேரவையின் உறுப்பினர்களுக்கு லட்சினையினை வழங்கி பதவி யேற்ற மாணவர்களை வாழ்த்தி தலைமை பற்றிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் மாணவர் பேரவையின் உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.
அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர் பேரவையின் தலைவராக பிரகாஷ், துணைத்தலைவராக கார்த்திகா ஸ்ரீ, முதன்மை அமைச்சராக சுபா, துணை முதன்மை அமைச்சராக ஜஸ்வந்த் ஆகியோர் பதவியேற்றனர். மொழி வளர்ச்சி மற்றும் இலக்கியத்துறை அமைச்சராக கேசினி, பண்பாடு மற்றும் கலாச்சார துறை அமைச்சராக அப்துல் ஜியா, விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரிஹரன், சுற்றுப்பயணங்கள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக பிரித்தியா, உடல்நலம் மற்றும் சுகாராதத்துறை அமைச்சராக இசையாழினி, சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சராக அன்புச்செல்வன், நீதித்துறை அமைச்சராக லக்சனா, சுற்றுச்சூழல் அமைச்சராக ஹரிகாந்த் ஆகியோர் பதவியேற்றனர்.
நேதாஜி சுபாஸ்சந்திர போஸ் அணியின் தலைவராக அருண் பிரசாத் மற்றும் துணைத்தலைவராக சரித்ரா, சர்.சி.வி.ராமன் அணியின் தலைவராக கீர்த்திவாசன், துணைத்தலைவராக அஸ்விதா, இராமானுஜம் அணியின் தலைவராக இளவரசன் துணைத்தலைவராக அனுஸ்ரீ, அப்துல்கலாம் அணியின் தலைவராக ஸ்ரீவாணி, துணைத்தலைவராக ராகவன் ஆகியோர் பதவியேற்றனர்.
மாணவ பேரவையின் தலைவர் பிரகாஷ் தலைமையில் பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழியேற்றனர். முதன்மை அமைச்சர் சுபா ஏற்புரை வழங்கினார். மொழி வளர்ச்சி மற்றும் இலக்கியத்துறை அமைச்சர் கேசினி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிகளை மாணவிகள் கார்த்திகா ஸ்ரீ மற்றும் அன்யதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ்ல்- தீபாவளி சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
- ரூ.1000-க்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கே.தியேட்டர் சாலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ்ல்- தீபாவளி சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
இது குறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் உரிமையாளர் எம்.பி.ரமேஷ் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 82 வருட நம்பிக்கை, நாணயம், கைராசி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலசின், வெங்கடேஸ்வரா சில்க்ஸ் இருந்து வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
ரூ.3 ஆயிரத்திற்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ் இலவசமாக வழங்குகிறோம். மேலும் ரூ.1000-க்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏராளமான டிசைன்களில் ஆடைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தீபாவளி வரையில் இந்த சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
இந்தியாவின் அனைத்து முன்னணி பிராண்ட் நிறுவனங்களின் ஜவுளிகளும் எங்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்சில் உள்ளது.
எங்களிடம் பட்டு புடவைகளுக்கு 40 சதவீத தள்ளுபடியும், அனைத்து முன்னணி பிராண்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடியும், உள்ளது. வாடிக்கையாளர்கள் எப்போதும் போல தங்களின் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- ஓசூர் டவுன் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன பள்ளி அருகேயுள்ள தொட்டு கணவாய் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் கணேஷ் (வயது 12).
இந்த சிறுவன் மோட்டார்சைக்கிளில் நாடகோப்பள்ளி சாலை யில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வேப்பன பள்ளி போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல ஓசூர் கணபதி நகரை சேர்ந்த பத்மநாபன் என்பவரது மகன் திருப்பதி(13) என்ற 8-ம் வகுப்பு மாணவன் திடீரென மாயமானான்.இந்நிலையில் ஓசூர்-தளி ரோட்டில் உள்ள கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி திருப்பதி உயிரிழந்தது தெரியவந்தது.
சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய ஓசூர் டவுன் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- இருவருக்கிடையே நேற்று இரவு 10 மணி அளவில் கைகலப்பு ஏற்பட்டது.
- ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியதால் லட்சுமப்பா அது குறித்து சாரதாவிடம் கேட்டார்.
சூளகிரி, அக்.9–-
சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி அருகே வரகானப் பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் நாகப்பா மகன் லட்சுமப்பா (வயது 65). இவருக்கு திருமணமாகி மனைவி , மகன் உள்ளனர்.
இந்த நிலையில் லட்சுமப்பாவுக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் மகள் சாரதா ( 37)என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியதால் லட்சுமப்பா அது குறித்து சாரதாவிடம் கேட்டார். இதனால் இருவருக்கிடையே நேற்று இரவு 10 மணி அளவில் கைகலப்பு ஏற்பட்டது.பின்னர் ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டதில் லட்சுமப்பா, அவரது மனைவி லட்சுமம்மா, மகன் சிவகுமார், உறவினர் ஆஞ்சி மகன் சுதீப் ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் லட்சுமப்பாவுக்கு தலை பகுதியில் வெட்டு விழுந்தது . பின்பு இவர்கள் திருப்பி தாக்கியதில் தாக்கியதில் முருகேஷ் மனைவி சாரதா மற்றும் ராஜப்பா மனைவி சின்னம்மா (வயது 40), சின்னசாமி மகன் சிவப்பா (வயது 27) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த மோதல் குறித்து அறிந்த உத்தனப்பள்ளி போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஓசூர், தேன்கனிகோட்டை மருத்துமனையில் சேர்த்து பின்பு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- போலீசார் அதிரடி நடவடிக்கையாக கைது செய்து வருகின்றனர்.
- 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி.
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கையாக கைது செய்து வருகின்றனர்.அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் வகையில் செயல்பட்டு வந்த 6 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.
அவர்கள் பற்றிய விபரம் வருமாறு:
தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கோடிச்சிப்பள்ளி பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 27), கிருஷ்ணகிரி தாலுகா பகுதியை சேர்ந்த கார்த்திக் (எ ) ரொனால்டு கார்த்திகேயன் (29), ஊத்தங்கரை பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்பாய் (எ) நித்யகுமார் (46), கிருஷ்ணகிரி டேம் பகுதியில் உள்ள கோணிக்கொட்டாய் உமாசங்கர் (28), நாகரசம்பட்டி அருகேயுள்ள ராமர் கொட்டாய் பகுதியை சேர்ந்த சேகர் (56), ஓசூர் ஹட்கோ அருகேயுள்ள அலசநத்தம் முனி (31) .
மேற்கண்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
- பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது.
- வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி ஆங்கில இலக்கிய மன்றம் சார்பில், "ஜெலோஸ் ஆங்கில மொழி கற்பித்தல் முறை" பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் ஆங்கிலத்துறைத் தலைவர் பழனிக்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முத்து மணி தலைமை தாங்கி பேசினார்.
அமெரிக்க சவுத் கரோலினா பல்கலைக்கழக ஆங்கிலத் துறைப் பேராசிரியர் கோர்ட்னி பெய்லி, ஆங்கில இலக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.
மேலும், ஆங்கிலம் கற்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், தன்னம்பிக்கை வளர்த்து கொள்வது பற்றியும் அவர் விரிவாக பேசினார். முடிவில், ரேகா நன்றி கூறினார்.
- தமிழ் எழுத்துக்கள், பழங்கால பொருட்கள் பற்றி விளக்கம் அளித்தனர்.
- 200 வருடங்களுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் பற்றியும் கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், தருமபுரி ஸ்ரீவிஜய் வித்யா லயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியருக்கு ஒரு நாள்பயிற்சி வகுப்பு நடந்தது. அரசு அருங்காட்சியக காப்பாட்சி யர் கோவிந்தராஜ் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் நடுகற்கள், கல்வெட்டுகள், தமிழ் எழுத்துக்கள், பழங்கால பொருட்கள் பற்றி விளக்கம் அளித்தனர்.
மேலும் நடுகற்களின் காலம், நடுகற்களின் வகைகள், புலிகுத்தி பட்டான், யானை குத்தி பட்டான், நவகண்டங்கள், பன்றிக்குத்தி பட்டான் இவற்றைப்குறித்தும், நடுகற்களோடு தொடர்பு டைய கல்வெட்டுகள் குறித்தும், காலந்தோறும் பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் பற்றியும், அதாவது சங்ககாலம் முதல் தற்போது வரை நமது மாவட்டத்தில் கிடைத்த செங்கற்கள் பற்றியும், அவற்றின் அளவுகள் பற்றியும் கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டைகள் பற்றியும், மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த பொருட்கள் பற்றியும், அங்கு வாழ்ந்த மக்களின் கால தொன்மை பற்றியும், மாணவியருக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. அதே போல கல்வெட்டுகளில் பயன்படுத்தப்படும் எழுத்து வகைகள், பிராமிலிருந்து 200 வருடங்களுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் பற்றியும் கூறப்பட்டது.
மேலும், அருங்காட்சி யகத்தில் உள்ள 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்ஆயுதம் முதல் 2000 வருடங்களுக்கு முந்தைய கல் ஆயுதம் வரை அவர்களிடம்
காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது. அருங்காட்சியத்தில் சேகரித்து வைத்துள்ள அனைத்து பொருள்களை யும் பார்வையிட்டு விவரங்களை அறிந்து கொண்டனர். இதில், பேராசிரியர்கள் லாவண்யா, ரேவதி மற்றும் சிங்காரம் மற்றும் 42 மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
- வேளாண்மை அலுவலர் லோகநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து பகுப்பாய்வ றிக்கையினை பெற்றி டுங்கள்.
கிருஷ்ணகிரி,
விதை விற்பனையா ளர்கள் நல்ல தராமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி விதைப்பரி சோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் விதை கொள்முதல் செய்யும் போது விதை விவர அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரி பார்த்து விதைகளை வாங்க வேண்டும். விதை விவர அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம் மற்றும் பயிரிட உகந்த மாநிலம் ஆகிய விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
விதை விற்பனையா ளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைக்குவியல்களின் தரமறிந்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய கேட்டுக்கொள்கிறேன். விதை உற்பத்தியாளர்கள் அல்லது மொத்த விற்பனை யாளர்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும் போது விற்பனை பட்டி யல்களுடன், விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வறிக்கையையும் கேட்டு சரிப்பாருங்கள்.
பகுப்பாய்வறிக்கை பெறப்படாத விதைக்கு வியல்களில் இருந்து பணி விதை மாதிரிகள் எடுத்து ஒரு பணிவிதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணமாக ரூ.80-ஐ செலுத்தி விதைகளின் தரத்தினை அறிந்துகொள்ள கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து பகுப்பாய்வ றிக்கையினை பெற்றி டுங்கள்.
விதைக்குவியல்களின் தரமறிந்து நல்ல தர மான விதைகளை விவசாயி களுக்கு விற்பனை செய்யுமாறு விதை விற்பனையாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அஞ்செட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- பச்சை கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பையில் காடு பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதாக அஞ்செட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. .
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் கஞ்சா செடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பையில் காடு கிராமத்தில் சுப்பிரமணி (வயது 53) என்பவருடைய வீட்டின் பின்புறத்தில் 5 அடி உயரமுள்ள தண்டு இலையுடன் கூடிய பச்சை கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
அவற்றின் மதிப்பு சுமார் 20 ஆயிரம் ஆகும்.போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருக்கும் சுப்பிரமணியை வலை வீசி தேடி வருகின்றனர்.






