என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில்  கல்லூரி மாணவிகளுக்கு ஒருநாள் பயிற்சி
    X

    கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ஒருநாள் பயிற்சி

    • தமிழ் எழுத்துக்கள், பழங்கால பொருட்கள் பற்றி விளக்கம் அளித்தனர்.
    • 200 வருடங்களுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் பற்றியும் கூறப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், தருமபுரி ஸ்ரீவிஜய் வித்யா லயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியருக்கு ஒரு நாள்பயிற்சி வகுப்பு நடந்தது. அரசு அருங்காட்சியக காப்பாட்சி யர் கோவிந்தராஜ் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் நடுகற்கள், கல்வெட்டுகள், தமிழ் எழுத்துக்கள், பழங்கால பொருட்கள் பற்றி விளக்கம் அளித்தனர்.

    மேலும் நடுகற்களின் காலம், நடுகற்களின் வகைகள், புலிகுத்தி பட்டான், யானை குத்தி பட்டான், நவகண்டங்கள், பன்றிக்குத்தி பட்டான் இவற்றைப்குறித்தும், நடுகற்களோடு தொடர்பு டைய கல்வெட்டுகள் குறித்தும், காலந்தோறும் பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் பற்றியும், அதாவது சங்ககாலம் முதல் தற்போது வரை நமது மாவட்டத்தில் கிடைத்த செங்கற்கள் பற்றியும், அவற்றின் அளவுகள் பற்றியும் கூறப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டைகள் பற்றியும், மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த பொருட்கள் பற்றியும், அங்கு வாழ்ந்த மக்களின் கால தொன்மை பற்றியும், மாணவியருக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. அதே போல கல்வெட்டுகளில் பயன்படுத்தப்படும் எழுத்து வகைகள், பிராமிலிருந்து 200 வருடங்களுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் பற்றியும் கூறப்பட்டது.

    மேலும், அருங்காட்சி யகத்தில் உள்ள 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்ஆயுதம் முதல் 2000 வருடங்களுக்கு முந்தைய கல் ஆயுதம் வரை அவர்களிடம்

    காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது. அருங்காட்சியத்தில் சேகரித்து வைத்துள்ள அனைத்து பொருள்களை யும் பார்வையிட்டு விவரங்களை அறிந்து கொண்டனர். இதில், பேராசிரியர்கள் லாவண்யா, ரேவதி மற்றும் சிங்காரம் மற்றும் 42 மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

    Next Story
    ×