என் மலர்
கிருஷ்ணகிரி
- பின்னால் வந்த மினி லாரி ஒன்று மோதியது.
- சம்பவ இடத்திலேயே சேகர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை சேர்ந்தவர் சேகர் (வயது 51).இவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பெரியார் நகர் பகுதியில் வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது மோட்டார் சைக்கிளில் பாகலூர் -ஓசூர் .சாலையில் சென்று கொண்டிருந்தார். பாலாஜி நகர் பகுதியில் அவர் சென்றபோது பின்னால் வந்த மினி லாரி ஒன்று மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே சேகர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பெணகள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
- பூஜை செய்து சுவாமியை வணங்கி நோன்பை நிறைவு செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கேதாரி கவுரி விரதத்தையொட்டி கோயில்களில் பெணகள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கேதாரி கவுரி விரதம் என்பது கணவ னும், மனைவியும் ஒரு வருக்கொருவர் பிரியாமல் இறுதி வரை மகிழ்வுடன் வாழ கடைபிடிப்பதாகும்.
இந்த விரதத்தை கடைபிடிக்கும் கணவன், மனைவி இருவரும் லட்சியத் தம்பதிகளாக வாழ்வார்கள். தீபாவளிக்கு மறுநாள், கலச வடிவிலோ, மண்ணால் செய்யப்பட்ட பொம்மை உருவத்திலோ, சிவபெருமானை தொடர்ந்து 21 நாட்களுக்கு பூஜை செய்து பெண்கள் வழிபட வேண்டும்.
நேற்று, கேதாரி கவுரி விரதத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள நேதாஜி ரோடு கடைவாசல் மாரியம்மன் கோயில், சென்னை சாலை பெரியமாரியம்மன் கோயில், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோயில், ஜோதிவிநாயகர் கோயில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில்களில், பெண்கள் விரதம் இருந்து அதிரசத்தைக் கொண்டு சென்று பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதே போல், கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயிலில், 21 எண்ணிக்கை கொண்ட அதிரசம், வடை, வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து சுவாமியை வணங்கி நோன்பை நிறைவு செய்தனர்.
வழக்கமாக, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்க சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடப்பது வழக்கம். ஆனால் நேற்று மாலை சூரிய கிரகணம் தோன்றுவதையொட்டி, பகல் 11 மணி முதல் பெண்கள் தனித்தனியாக கோயிலுக்கு சென்று அதிரசம் படைத்து வேண்டுதல் நிறைவேற்றி வீட்டிற்கு சென்றனர்.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதே போல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- நான்கு தூண்களில் இரண்டு ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழனுடைய கல்வெட்டாகும்.
- ஓசூர், முரசுநாடு என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டு வெளிப்ப டுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா மதகொண்ட ப்பள்ளியில், பாப்பண்ணா என்பவருக்கு சொந்தமான இடத்தில், மண்ணில் புதைந்திருந்த நான்கடி உயரமும், ஒரு அடி விட்டமும் கொண்ட நான்கு கல் தூண்கள், முன்னாள் தலைவர் ராஜா மற்றும் கிராமத்தினர் உதவியுடன் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த நான்கு தூண்களில் இரண்டு ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழனுடைய கல்வெட்டாகும்.
இந்த கல்வெட்டு குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சி யர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
ஓசூருக்கு முரைசூர் நாடு என்ற பெயர் இக்கல்வெட்டில்தான் முதன்முதலாக வருகிறது. இதுவரை 13ம் நூற்றாண்டில் தான் முரசுநாடு என்ற பெயர் வந்ததாகக் கருதப்பட்டுவந்தது. ஆனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஓசூர், முரசுநாடு என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டு வெளிப்ப டுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோழர் காலத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் மிக பழமையான கல்வெட்டு இதுவாகும்.மேலும் இது கோவிலுக்கு வழங்கப்பட்ட தானத்தைக் குறிக்கும் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மிகப்பழமையான கோவில் மதகொண்டப்பள்ளி அர்க்கீஸ்வரர் கோவி ல் என்பதும், ஓசூர் 1020-ம் ஆண்டிலேயே முரசுநாடு என்றழைக்கப்பட்டதும் தெரியவருகிறது. எனவே இக்கல்வெட்டு வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், சரவணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
- விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் வருகிற 28-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
கிருஷ்ணகிரியில் வருகிற 28-ம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிராமங்களில், ஆடு, மாடுகளுக்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது.
- கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பதாக தெரிவித்தனர்.
ஓசூர்,
ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால், மாவட்டத்தில் சில கிராமங்களில் தீபாவளி கொண்டாடப்படவில்லை.
ராயக்கோட்டை அடுத்த முத்தம்பட்டி, எடம்பட்டி, தின்னுார், தொட்ட திம்மனஹள்ளி சுற்று வட்டார கிராமங்களில், ஆடு, மாடுகளுக்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது.
இதனால் கால்நடைகள் முடங்கி, விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. கறவை மாடுகளை இந்நோய் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் பால் உற்பத்தி முற்றிலும் குறைந்து வருகிறது. இதனால் கிராம மக்கள் தங்க ளுக்குள் கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்த்த னர். பட்டாசு புகையால் மாடுகளுக்கு அம்மை நோய் பாதிப்பு அதிகமாகும் எனக்கூறப்படுவதால் கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பதாக தெரிவித்தனர்.
கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கி வருவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.ஆனால் போதுமான மருந்துகள் இல்லை என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதனால் நாட்டு வைத்தியம் மூலம் கால்நடைகளை காப்பாற்ற விவசாயிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
- தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
- கரையோர மக்களுக்கு வருவாய் துறையினர் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிந்த போதும், தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. அணைக்கு நேற்று முன்தினம், 3,070 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், 1,700 கன அடியாக நீர்வரத்து நேற்று காலை சரிந்தது. அணையில், 44.28 அடிக்கு, 40.02 அடிக்கு நீர் உள்ளது.
இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் அப்படியே திறக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கம்போல் ஆற்றில், ரசாயன நுரையுடன் கூடிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வருவாய் துறையினர் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- 2881 சதுரமீட்டர் கொண்ட ஒரு அலுவலகம் காலியாக உள்ளது.
- பொதுப்பணி துறையினரால் நிர்ணயிக்கப்படும் வாடகையே வசூல் செய்யப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 433, பெங்களுர் ரோடு என்ற முகவரியில் முன்னாள் படைவீரர் மையத்தில் முதல் தளத்தில் 2881 சதுரமீட்டர் கொண்ட ஒரு அலுவலகம் காலியாக உள்ளது. இது அலுவலகத்திற்கு ஏற்ற இடமாக உள்ளது. இவ்விடத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணி துறையினரால் நிர்ணயிக்கப்படும் வாடகையே வசூல் செய்யப்படும்.
இவ்விடமானது மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் வங்கிகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மாதவாடகைக்கு உரிய ஒப்பந்த அடிப்படையில் உரிம கட்டணத்திற்கு விடப்பட உள்ளது.
மேலும் விவரங்கள் அறிந்திட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.04343-236134 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்துள்ளார்.
- சம்பவ இடத்திலேயே சந்திர வன்னியம் மன்னட்டி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
- வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே நாராயணசாமி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் லிங்கேஸ்வரப்பெட்ட பகுதியை சேர்ந்தவர் சந்திர வன்னியம் மன்னட்டி (வயது 33).இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் சென்னை பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்திர வன்னியம் மன்னட்டி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே யுள்ள காமந்திரப்பள்ளி பகுதியை சேர்ந்த நாராயணசாமி (31) என்ற வாலிபர் தொரப்பள்ளி-கொத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே நாராயணசாமி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வெள்ளிப் பொருட்கள் திருடிசென்றனர்.
- பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இருதுகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சமந்தகோட்டை கிராமத்தில் மத்தூரம்மா கோவில் உள்ளது. கோவிலில் அதே கிராமத்தை சேர்ந்த ரங்கப்பா என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜை முடித்துவிட்டு கோயிலை போட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றார்,
நேற்று காலை கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோயில் கதவின் பூட்டை உடைக்கப்பட்டுள்ளது பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். ஊர் பெரியவர்கள் கோவிலுக்கு சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து பூசாரி ரங்கப்பா தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதேபோல் அதே கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வெள்ளிப் பொருட்கள் திருடிசென்றனர்.
இது குறித்து பூசாரி மாரப்பா அளித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே ஒரே நாள் இரவில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளை சம்பவம் நடந்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் உள்ள கோவில்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது .அதனால் போலீசார் இப்பகுதியில் ரோந்து பணியில ஈடுபட்டு திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கூறி வருகின்றனர்.
- கோ-கோ இளையோர் பிரிவு (14 வயதிற்குட்பட்டவர்கள்) போட்டிகள் நடந்தது.
- ஜான் போஸ்கோ பள்ளியைச் சேர்ந்த 3 மாணவியர் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓசூர்,
ஓசூரில் தேன்க னிக்கோட்டை சாலையில் உள்ள புனித ஜான் போஸ்கோ அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கோ-கோ இளையோர் பிரிவு (14 வயதிற்குட்பட்டவர்கள்) போட்டிகள் நடந்தது.
இதில் தமிழ்நாடு அணியில் தேர்வாகியுள்ள கோவை, கடலூர். சிவகங்கை, ஈரோடு. கன்னியாகுமரி, கிருட்டிணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15 மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் ஏஞ்சலா, மற்றும் தலைமையாசிரியை ஜெயந்தி ஆகியோர் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தார்.
இந்த அணியில், ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளியைச் சேர்ந்த 3 மாணவியர் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.பள்ளியின் தாளாளர் சீனி. திருமால்முருகன் தலைமை தாங்கினார்.
ஊத்தங்கரை தீயணைப்பு துறையின் நிலைய அலுவலர் சக்திவேல் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பதையும், தீ விபத்துக்கள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதல் உதவிகள் பற்றியும் செய்முறை மூலம் விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியை தீயணைப்பு துறை மற்றும் இந்தியன் ஆயில் கார்பொரேஷன் லிமிடெட், மேக் இன்டானே காஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தியது.
நிகழ்ச்சியின் இறுதியாக பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதை தொடர்ந்து தலைவர் தெய்வமணி நன்றி கூறினார்.
- தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியேர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் 2-வது முறை யாக தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பது. மத்திய அரசின் இந்தி திணிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும்.
அகற்ற தவறும் பட்சத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், சுகவனம், மாநில மகளிர் அணி தலைவர் காஞ்சனா கமலநாதன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், நாகராசன், சாமிநாதன்,கோதண்டன், அஸ்லம், சித்ரா சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






