என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னாள் படைவீரர் மையத்தில் மாத வாடகைக்கு இடம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளலாம் -கிருஷ்ணகிரி கலெக்டர் அறிவிப்பு
- 2881 சதுரமீட்டர் கொண்ட ஒரு அலுவலகம் காலியாக உள்ளது.
- பொதுப்பணி துறையினரால் நிர்ணயிக்கப்படும் வாடகையே வசூல் செய்யப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 433, பெங்களுர் ரோடு என்ற முகவரியில் முன்னாள் படைவீரர் மையத்தில் முதல் தளத்தில் 2881 சதுரமீட்டர் கொண்ட ஒரு அலுவலகம் காலியாக உள்ளது. இது அலுவலகத்திற்கு ஏற்ற இடமாக உள்ளது. இவ்விடத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணி துறையினரால் நிர்ணயிக்கப்படும் வாடகையே வசூல் செய்யப்படும்.
இவ்விடமானது மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் வங்கிகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மாதவாடகைக்கு உரிய ஒப்பந்த அடிப்படையில் உரிம கட்டணத்திற்கு விடப்பட உள்ளது.
மேலும் விவரங்கள் அறிந்திட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.04343-236134 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்துள்ளார்.
Next Story






