என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
ஊத்தங்கரையில் உள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு முகாம்
- விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.பள்ளியின் தாளாளர் சீனி. திருமால்முருகன் தலைமை தாங்கினார்.
ஊத்தங்கரை தீயணைப்பு துறையின் நிலைய அலுவலர் சக்திவேல் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பதையும், தீ விபத்துக்கள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதல் உதவிகள் பற்றியும் செய்முறை மூலம் விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியை தீயணைப்பு துறை மற்றும் இந்தியன் ஆயில் கார்பொரேஷன் லிமிடெட், மேக் இன்டானே காஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தியது.
நிகழ்ச்சியின் இறுதியாக பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதை தொடர்ந்து தலைவர் தெய்வமணி நன்றி கூறினார்.






