search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டை அருகே  ஒரே நாளில் அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளை
    X

    தேன்கனிக்கோட்டை அருகே அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடந்த கோவில்கள்.

    தேன்கனிக்கோட்டை அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளை

    • கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வெள்ளிப் பொருட்கள் திருடிசென்றனர்.
    • பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இருதுகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சமந்தகோட்டை கிராமத்தில் மத்தூரம்மா கோவில் உள்ளது. கோவிலில் அதே கிராமத்தை சேர்ந்த ரங்கப்பா என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜை முடித்துவிட்டு கோயிலை போட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றார்,

    நேற்று காலை கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோயில் கதவின் பூட்டை உடைக்கப்பட்டுள்ளது பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். ஊர் பெரியவர்கள் கோவிலுக்கு சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பூசாரி ரங்கப்பா தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதேபோல் அதே கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வெள்ளிப் பொருட்கள் திருடிசென்றனர்.

    இது குறித்து பூசாரி மாரப்பா அளித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே ஒரே நாள் இரவில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளை சம்பவம் நடந்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இப்பகுதியில் உள்ள கோவில்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது .அதனால் போலீசார் இப்பகுதியில் ரோந்து பணியில ஈடுபட்டு திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கூறி வருகின்றனர்.

    Next Story
    ×