என் மலர்
கிருஷ்ணகிரி
- வசாயிகள் சங்கங்கள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இதற்கு மாவட்டத் தலைவர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழக விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு நிலம் ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை உடனடியாக நிறுத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்டத் தலைவர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பிரகாஷ், பழனி, மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட பொருளாளர் ராஜு, மாவட்ட துணை செயலாளர் அண்ணாமலை, மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்ட செயலாளர் சின்ராஜ் நன்றி கூறினார்.
ஆரப்பாட்டத்தில் தமிழ்நாடு நிலம் ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 16-ந்தேதி அன்று கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
- பூவரசன், இவரது நண்பர் ராஜா ஆகியோர் சேர்ந்து மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, மே.18-
கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட் ஜாகீர்வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது28).
இவர் பேக்கரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அந்த பேக்கரி கடையின் உரிமையாளர் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளியை சேர்ந்த பூவரசன், இவரது நண்பர் ராஜா ஆகியோர் சேர்ந்து மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த மூர்த்தி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.
- நீங்கள் 2 கோடி பரிசு பெற்றுள்ளீர்கள் என்று கூறப்பட்டு இருந்தது.
- தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.7.50 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி, மே.18-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரெயில்வே நிலையம் அருகே வசித்து வருபவர் வள்ளுவன். இவரது மகள் மெல்பா (வயது28). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் நிறுவனத்தில் குறைந்த முதலீடு செய்தால்
அதிகம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி அவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது.
இதே போல் சாமந்தமலை அருகேயுள்ள குட்டூர் பகுதியை சேர்ந்தவர் அருண் (28). இவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் நீங்கள் 2 கோடி பரிசு பெற்றுள்ளீர்கள் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பிய அவர் உடனடியாக போன்று செய்தார். அதில் அவர் உங்களுக்கு 2 கோடி பணம் வேண்டும் என்றால் உடடியாக நீங்கள் 7.50 லட்சம் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதனால் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.7.50 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் கட்டியும் எந்த சிகிச்சையும் செய்யவில்லை.
- அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் ரூபாய் வரை செலாவகும் என்றும், மருந்து மற்றும் மருத்துவமனை செலவையும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் வரை ஆகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா காவேரிநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகன் விஜயகுமார், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை கண்ணையன் கடந்த 14-ந் தேதி இரவு 8:30 மணிக்கு மளிகை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது காவேரிநகரில் இருந்து கோபசந்திரம் செல்லும் சாலையில் யானை துரத்திச் சென்று மிதித்ததில் படுகாயம் அடைந்தார்.
ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு என் தந்தையை பரிசோதனை செய்துவிட்டு, பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் கட்டியும் எந்த சிகிச்சையும் செய்யவில்லை.
அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் ரூபாய் வரை செலாவகும் என்றும், மருந்து மற்றும் மருத்துவமனை செலவையும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் வரை ஆகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இவ்வளவு பணத்தை எங்களால் கட்ட முடியாத நிலையில் இருப்பதால், என் தந்தையின் முழு மருத்துவச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சற்று மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டதாக கூறப்படுகிறது.
- ஏரியில் அவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சின்னஒரப்பம் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி பாஞ்சாலை (வயது68). இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஞ்சாலை காலைகடன் கழிப்பதற்காக ேதாட்டத்திற்கு சென்றார். அங்கு உள்ள ஏரியில் அவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கந்தி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெங்கடேசன் தனது மகனை அழைத்து கொண்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள முனிகவுண்டன் ஏரிக்கு வந்தார்.
- ஹேமந்த் நீச்சல் தெரியாமல் ஆழத்திற்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் எத்திகொண்டபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ேஹமந்த் (வயது10). இந்த நிலையில் வெங்கடேசன் தனது மகனை அழைத்து கொண்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள முனிகவுண்டன் ஏரிக்கு வந்தார்.
அப்போது அங்கு தனது மகனுடன் அவர் குளிக்க சென்றார். இதில் ஹேமந்த் நீச்சல் தெரியாமல் ஆழத்திற்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று வேகமாக வந்து சூர்யா மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் சூர்யா (வயது22).
மெக்கானிக்கான இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை-திருவண்ணாமலை சாலையில் நாயக்கனூர் பகுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று வேகமாக வந்து சூர்யா மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து சூர்யாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த அவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி மதுக்குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.
- வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வேங்கடதாம்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது28). இவர் அங்குள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி மதுக்குடித்து விட்டு வீட்டிற்கு வருவார். இதனால் அவருக்கும், பெற்றோருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்த காணப்பட்ட ரெங்கநாதன் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சிங்காரப்பேட்டை கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனவைி விமலா (26). இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். அதற்கு அதிக பணம் செலவு ஆகுவதால் குடும்ப நடந்த முடியாமல் இருந்து வருவதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட விமலா சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவருக்கு அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுவலி யால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
- வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கயிறால் தூக்கு போட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம், மே.17-
இவருக்கு அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுவலி யால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கயிறால் தூக்கு போட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனம் அருகே உள்ள மலையான்டஅள்ளி புதுரை சேர்ந்தவர் ஜோதி (வயது39). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இந்நிலையில் இவருக்கு அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுவலி யால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வயிற்று வலி அதிகமாகவே வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கயிறால் தூக்கு போட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த இவரது சகோதரர் உடனடியாக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து இன்ஸ்பெக்டர் முரளி விசாரணை நடத்தி வருகிறார்.
- வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை
- ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்நதவர் சாமிநாதன் (வயது65).
இவர் கடந்த 14-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கிடைக்காததால் சாமிநாதன் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி தனலட்சுமி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின்பேரில் ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று தளி பகுதியைச் சேர்ந்த சந்தீப் (வயது24). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் லேப்-டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை சீனிவாசன் தளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வாலிபரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
- திலக்கை கொல்ல சசிகுமாருக்கு திம்மராயப்பா பணம் கொடுத்ததும், தெரியவந்தது.
- போலீசார் 3 பேரை சுற்றி வளைத்து நேற்று கைது செய்தனர்.
ஓசூர், மே.17-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி பக்கமுள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் திலக் (24). ரவுடி ஆவார். கடந்த 12-ந் தேதி ஓசூர் பெரியார் நகர் டீக்கடை அருகில் இவரை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் கொலை செய்யப்பட்ட திலக் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கடந்த 1.1.2022 அன்று சொப்பட்டியை சேர்ந்த மோகன்பாபு என்பவரை கொலை செய்ததும், அந்த வழக்கில் திலக் உள்பட 6 பேரை மத்திகிரி போலீசார் கைது செய்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜாமீனில் திலக் வந்த நிலையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மோகன்பாபுவின் தந்தை திம்மராயப்பா என்பவரை ஓசூர் டவுன் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள்.
அதில் தனது மகன் மோகன்பாபுவை கொலை செய்ததற்கு பழிக்கு பழி வாங்கும் விதமான தான் மத்திகிரியை சேர்ந்த சசிகுமார்(24) என்பவர் மூலம் மேற்கண்ட கொலையை செய்ததாக கூறியிருந்தார்.
தொடர் விசாரணையில், திலக், டீ கடையில் இருந்த தகவலை, சசிகுமாருக்கு இவர்தான் தெரியபடுத்தினார் என்றும், திலக்கை கொல்ல சசிகுமாருக்கு திம்மராயப்பா பணம் கொடுத்ததும், தெரியவந்தது.
இதையடுத்து, திம்மராயப்பா, மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி மகன் சிவகுமார்(24) மற்றும் தின்னூரை சேர்ந்த வெங்கடேஷ் (25) ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளியான சசிகுமார், நேற்று சங்ககிரி கோர்ட்டில் சரணடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாகியுள்ள வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






