search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள் - போலீசார் இடையே வாக்குவாதம்
    X

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தபோது எடுத்த படம் 

    நாகர்கோவிலில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள் - போலீசார் இடையே வாக்குவாதம்

    • தனியார் காடுகள் சட்டத்தில் சில பகுதிகளை நீக்க வேண்டும்.
    • சூழல் தாங்கு மண்டல பகுதிகள் என்பதை மறு வரையறை செய்ய வேண்டும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. பழங்குடி மக்களின் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டி தர வேண்டும்.விலங்குகள் சரணாலயம், யானைகள் மற்றும் புலிகள் சரணாலயம் என்ற பெயரில் பூர்வீக பழங்குடி அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றம் செய்வதை நிறுத்த வேண்டும்.

    தனியார் காடுகள் சட்டத்தில் சில பகுதிகளை நீக்க வேண்டும். சூழல் தாங்கு மண்டல பகுதிகள் என்பதை மறு வரையறை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு குமரி மாவட்ட குழு தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.செயலாளர் வேலப்பன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பினு குமார் வரவேற்று பேசினார்.பொருளாளர் ரமேஷ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து, நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், பேச்சிப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் தேவதாஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மணி,ராஜேந்திரன், சுகுமாரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரையும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க முடியாது. ஒரு சிலர் மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர் .இதனால் போலீசாருக்கும் பழங்குடி மக்கள் சங்கம் நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளும் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்து மனு அளித்தனர்.

    Next Story
    ×