search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் அரசு சுற்றுலா மாளிகையில் புகுந்த பாம்பு
    X

    கன்னியாகுமரி அரசு சுற்றுலாமாளிகையில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டபோது எடுத்த படம்.

    கன்னியாகுமரியில் அரசு சுற்றுலா மாளிகையில் புகுந்த பாம்பு

    • தீயணைக்கும் படையினர் மீட்டனர்
    • மண்ணுளி பாம்பு வகையை சேர்ந்தது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையானகன்னியா குமரிக்கு வரும் ஜனாதிபதி, பிரதமர், பல மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய-மாநில அமைச்சர் கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமு கர்கள் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. பொதுப்பணி துறையின் கட்டிட பிரிவு கட்டுப்பாட்டில் இந்த அரசு விருந்தினர் மாளிகை உள்ளது.

    இந்த அரசு விருந்தினர் மாளிகை முறையான பராமரிப்பு இல்லாமல், புதர்கள் நிறைந்தும், சுற்று சுவர்கள் இடிந்தும், ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் செடி, கொடிகள் வளர்ந்தும், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் குப்பை கிடங்காகவும், இரவு வேளைகளில் சமூக விரோதிகளுக்கு மது அருத்தும் கூடாரமாகவும் மாறியுள்ள பரிதாப நிலையில் காணப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் இந்த அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள முக்கிய கட்டிடத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து அங்குள்ள ஊழியர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியதாஸ் தலைமையில்தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்து அந்த பாம்பை லாவக மாகபிடித்தனர். அந்த பாம்பு சுமார் 3 அடி நீளம் கொண்டதாக இருந்தது. மண்ணுளி பாம்பு வகையை சேர்ந்தது.

    பின்னர் தீயணைக்கும் படையினர் அந்தப் பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த விஷ பாம்பை பாது காப்பான காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

    Next Story
    ×