என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பரங்கிமலையில் மகன் – மகளுடன் தாய் மாயம். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    பரங்கிமலை தசரதபுரத்தை சேர்ந்தவர் ஜோதி இவர் நேற்று இரவு பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது.

    எனது மகள்அபர்ணா(29) பேரப்பிள்ளைகள் ஹரணி (11), ரவிச்சந்திரன்(8) ஆகியோரை நேற்று காலை முதல் காணவில்லை என்று கூறியிருந்தார்.

    இது குறித்து பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து அபர்ணாவின் கணவர் சுரேஷ்சிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் சுரேஷ் நான் நேற்று காலையில் வேலைக்கு சென்று வீடு திரும்பினேன். அப்போது 3 பேரையும் காணவில்லை என்று கூறினார். அபர்ணா, ஹரிணி, ரவிச்சந்திரன் ஆகியோர் எங்கு சென்றார்கள்? என்று தெரியவில்லை. அபர்ணாவின் செல் போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கத்திப்பாரா மேம்பாலத்தில் வெயிலுக்கு மயங்கி விழுந்த முதியவர் பலியானார்.

    ஆலந்தூர்:

    கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் கடந்த 12-ந்தேதி 55 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் நடந்து சென்றார். வெயில் தாங்க முடியாமல் அவர் திடீர் என மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி காலை இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து பரங்கிமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி காஞ்சிபுரம் மாவட்டதில் செயல்படும் தனியார் சுயநிதி பள்ளிகளில் 2016-17 கல்வி ஆண்டிற்கான நுழைவு நிலை வகுப்புகளில் கட்டணமின்றி சேர்க்கை விண்ணப்பங்கள் பெற ஜூன் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பங்கள் அந்தந்த தனியார் சுயநிதி பள்ளிகள், முதன்மை கல்வி அலுவலர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் கிடைக்கும்.

    ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் நலிந்த பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்டோர் சேர்க்கை கோர முடியும். பள்ளி இருக்கும் இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டருக்குள் வசிப்பிடம் இருக்க வேண்டும்.

    இது தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம், மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் நலிந்த பிரிவினர் பயன் பெற 5209 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 2641 மாணவர்கள் சேர்க்கை மட்டுமே நடைபெற்றுள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெண் கொலையில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கச்சிப்பட்டில் உள்ள முட்புதரில் கடந்த மாதம் 23-ந்தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் கண்ணையன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். ஒரு மாதமாக கொலையுண்ட பெண் யார்? கொலையாளி குறித்து தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் கொலையுண்டவர் துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த வசந்தி (47) என்பது தெரிந்தது. அவரது கணவர் ராமன் சில ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டார்.

    போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்த வசந்தி ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். எனவே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

    வசந்தியிடம் ஏலச்சீட்டு கட்டியவர்கள் யார்-யார்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்தனர். அப்போது குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கத்தில் வசித்து வந்த பரசுராமன் மாயமாகி இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த பரசுராமனை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் வசந்தியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து பரசுராமனை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கத்தில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வந்தேன். ஒரு நண்பர் மூலம் வசந்தியுடன் தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    நான் வசந்தியிடம் சீட்டு கட்டினேன். மேலும் ரூ. 1 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தேன். சென்னையில் மழை வெள்ளம் வந்தபோது சரியாக பணம் கட்ட முடியவில்லை.

    எனவே போலீசில் புகார் செய்யப் போவதாக வசந்தி கூறினார். தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்டு அவர் மிரட்டல் விடுத்தார். எனவே அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.

    கடந்த மாதம் 22-ந்தேதி ரூ.1 லட்சம் கடனை திருப்பி தருவதாக வச்நதியை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கச்சிப்பட்டிற்கு வரவழைத்தேன். அங்கு நாங்கள் உல்லாசமாக இருந்தோம்.

    பின்னர் அவர் பணத்தை கேட்டு தகராறு செய்தார். என்னிடம் பணம் இல்லாததை தெரிந்ததும் போலீசில் புகார் செய்வதாக மிரட்டினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்தியின் கழுத்தை அறுத்தேன். இதில் அவரது உயிர் போகவில்லை. எனவே சேலையால் கழுத்தை இறுக்கி கொன்றேன்.

    போலீசில் இருந்து தப்பிக்க சொந்த ஊரான திருவண்ணாமலையில் பதுங்கி இருந்தேன். போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    நங்கநல்லூரில் தபால் பெட்டியில் இருந்து பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பழவந்தாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந் தேதி தபால் ஊழியர் கடிதங்களை எடுக்க முயன்றபோது அதில் கட்டுக்கட்டாக 23 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி ஆய்வு செய்த தபால் துறை உயர் அதிகாரிகள், அந்த பாஸ்போர்ட்டுகளை பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவற்றை சென்னை பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுபற்றி விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையில் அதே தபால் பெட்டியில் மீண்டும் 6-ந் தேதி 13 பாஸ்போர்ட்டுகளும், 8-ந் தேதி 15 பாஸ்போர்ட்டுகளும் கிடந்தன. 3 நாட்களும் சேர்த்து மொத்தம் 51 பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றிய போலீசார், அவற்றின் உரிமையாளர்கள் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அதில் இருந்த முகவரிகளுக்கு சம்மன் அனுப்பினார்கள்.

    மேலும் அந்த பாஸ்போர்ட்டுகளில் சென்னை முகவரியில் இருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள், அந்த பாஸ்போர்ட்டுகள் சென்னை விமான நிலையத்தில் தொலைந்து போனதாகவும், அதற்கு பதிலாக மாற்று பாஸ்போர்ட்டுகளை பெற்று விட்டதாகவும் கூறினார்கள்.

    இதையடுத்து பழவந்தாங்கல் போலீசார், சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் தொலைந்து போன பாஸ்போர்ட்டுகள் ஏதாவது கண்டெடுக்கப்பட்டு உள்ளதா?, தொலைந்து போன பாஸ்போர்ட்டு குறித்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா?. தபால் பெட்டியில் கிடந்த பாஸ்போர்ட்டுகள் சென்னை விமான நிலையத்தில் தொலைந்து போனவை தானா? என்பது குறித்து விமான நிலையத்தில் உள்ள பதிவேடுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த விசாரணை விரைவில் முடிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த பெண் சென்னையைச் சேர்ந்தவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கட்சிப்பட்டு என்ற இடத்தில் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கடந்த 23-ந்தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவர் யார், எந்த ஊர் என்ற விவரம் எதுவும் தெரியாமல் இருந்து வந்தது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் வசந்தி (47). சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர். ராமன் என்பவரது மனைவி ஆவார். சீட்டு பணம் நடத்தி வந்தார்.

    அவரை கொன்றது யார்? என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சட்டசபையில் மக்கள் பிரச்சனைக்காக உறுதியான குரலை தி.மு.க. எழுப்பும் என்று சென்னை விமான நிலையத்தில் எம்.பி. கனிமொழி பேட்டியளித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சட்டசபையில் தி.மு.க. பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படும். மக்கள் பிரச்சனைகளுக்காகவும், மக்களுக்கான நல திட்டங்களுக்காகவும் தி.மு.க. குரல் கொடுக்கும்.

    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியபடி சட்டசபையில் மக்கள் பிரச்சனைக்காக உறுதியான குரலை தி.மு.க. எழுப்பும்.

    தற்போது தமிழக சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்களின் பலம் அதிகரித்துள்ளது. கடந்த முறை போல் இந்த தடவை ஆளுங்கட்சி சட்டசபையில் நடந்து கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ரூ.80 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விலைவாசி உயர்வால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் துயரத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன என்று அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. கள்ள சந்தையில் தக்காளி பதுக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் விளைச்சல் குறைந்ததே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்று தெரியவந்தது. மத்திய அரசு அதை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ரூ.80 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது

    தமிழக சட்ட மன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெறவேண்டும்.

    சிலை கடத்தல் விவகாரத்தில் அரசு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். கோவில்களில் உள்ள சிலைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார். இந்த விபத்து குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூரை அடுத்த திருப்புலிவனம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் அன்பரசு (வயது 27). தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

    கடந்த 10-ந் தேதி அன்பரசு மோட்டார் சைக்கிளில் நண்பரை பார்க்க திருப்புலிவனத்தில் இருந்து படூர் நோக்கி சென்றார். அப்போது நிலைதடுமாறி சாலையோரம் தவறி விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பரசு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஹரித்துவாரில் நிறுவப்பட இருக்கும் திருவள்ளுவர் சிலை தமிழகத்தில் முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று தருண் விஜய் எம்.பி. கூறினார்.
    ஆலந்தூர்:

    பா.ஜனதா கட்சியின் உத்தரகாண்ட் மாநில எம்.பி. தருண் விஜய், நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை ஆற்றின் கரையில் வருகிற 26-ந் தேதி 4½ டன் எடை கொண்ட 12 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலையை உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி திறந்து வைக்கிறார். இதில் உத்தரகாண்ட் மாநில கவர்னர் மற்றும் பிற மாநில கவர்னர்கள் கலந்துகொள்கின்றனர்.

    இதற்காக திருவள்ளுவர் சிலை பயணம் தமிழகத்தில் 22-ந் தேதி வரை நடைபெறும். இந்த பயணம் கன்னியாகுமரியில் தொடங்கப்படும். அங்கிருந்து மதுரை, ஈரோடு, கரூர், கோவை, காஞ்சீபுரம் போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்றுவிட்டு 22-ந் தேதி சென்னைக்கு வந்தடையும்.

    திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்கு வருமாறு தமிழக கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் தமிழக தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படும். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை ஆற்றின் கரையில் திருவள்ளுவர் சிலையை திறப்பதன் மூலம் வடமாநிலங்களில் திருக்குறள் பரவும்.

    இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து ஹரித்துவார் வரும் மக்கள், திருவள்ளுவரின் புகழ் பற்றி அறிந்து கொள்வார்கள். இதன் மூலம் திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கப்படும். பிரதமர் மோடியின் நல்லாசியுடன் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும்.

    இந்த விழாவில் தமிழக தலைவர்கள், தமிழ் அமைப்பினர் கலந்து கொள்வார்கள். இந்தியா முழுவதும் திருவள்ளுவரின் புகழை கொண்டு சேர்க்கும் பணி செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவரிடம், “மத்திய அரசு சமஸ்கிருதத்தை திணிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறி உள்ளாரே?” என நிருபர்கள் கேட்டதற்கு “நான் திருவள்ளுவர் சிலை தொடர்பான பணிகள் செய்ய வந்து உள்ளேன். அரசியல் பேச விரும்பவில்லை” என்றார்.

    குரோம்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நெருங்கிய உறவினரான என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். கடன் பிரச்சினையில் இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரிந்தது.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். இவர், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 37).

    நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணவேணி, கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    கிருஷ்ணவேணி தினமும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது இரு குழந்தைகளையும் மொபட்டில் சென்று கொண்டு விடுவது வழக்கம். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு மொபட்டை பழுது பார்க்க மெக்கானிக் கடையில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்து உள்ளார்.

    வீட்டில் மெயின் கதவு அருகில் கிரில் கேட்டும், அதற்கு முன்னால் மற்றொரு இரும்பு கேட்டும் உள்ளது. எப்போதும் கேட்டை மூடி விட்டுத்தான் உள்ளே இருப்பார். அதிகமாக வெளிஆட்களிடம் பேசமாட்டார்.

    இதனால் கிருஷ்ணவேணிக்கு தெரிந்த நபர்தான் இந்த கொலையை செய்து இருக்கவேண்டும் என போலீசார் முடிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கிருஷ்ணவேணியின் செல்போனில் வந்த நம்பர்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணவேணியின் கணவர் ஜெயமுருகனின் தங்கை கணவர் போத்திராஜ் என்பவரின் சகோதரி மகன் அருண்குமார்(24) மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

    அதன்பேரில் நேற்று மாலை அருண்குமாரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    கிருஷ்ணவேணியின் கணவர் ஜெயமுருகனின் உறவினரும், அருண்குமாரின் தந்தையுமான எழும்பூர் சாமி தெருவில் வசிக்கும் தர்மலிங்கம் என்பவருக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஜெயமுருகன், ரூ.50 ஆயிரம் கடன் கொடுத்து உள்ளார்.

    அந்த கடன் தொகையை தர்மலிங்கம் திருப்பிக்கொடுக்காததால் கிருஷ்ணவேணி போனில் தொடர்பு கொண்டு அவரிடம் கடன் தொகையை திரும்ப தரும்படி கேட்டு உள்ளார்.  அப்போது தர்மலிங்கத்தை கிருஷ்ணவேணி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் தர்மலிங்கத்தின் மகன் அருண்குமார் ஆத்திரம் அடைந்தார். நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு வீட்டில் கிருஷ்ணவேணி தனியாக இருப்பதை அறிந்து மோட்டார் சைக்கிளில் எழும்பூரில் இருந்து குரோம்பேட்டைக்கு அருண்குமார் வந்தார்.

    வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணவேணியிடம் இது தொடர்பாக தகராறு செய்தார். அப்போது வீட்டில் இருந்த தலையணையால் அவரது முகத்தில் வைத்து அழுத்தினார். இதில் கிருஷ்ணவேணி மயக்கம் அடைந்தார்.

    அவருக்கு நினைவு திரும்பினால் தன்னை காட்டிக்கொடுத்து விடுவார் என பயந்த அருண்குமார், வீட்டில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணவேணியின் கழுத்து, விலா பகுதிகளில் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான அருண்குமார், என்ஜினீயர் ஆவார். ஆனால் தற்போது வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்து உள்ளார்.

    பெண் கொலை வழக்கில் அவரது நெருங்கிய உறவினரே அவரை கொலை செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குரோம்பேட்டை பெண் கொலை தொடர்பாக அவரது உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம், ஜூன். 15–

    குரோம்பேட்டை, பாரதி புரம் நெல்லையப்பர் தெருவில் வசித்து வருபவர் ஜெயமுருகன். சாப்ட்வேர் என்ஜினியர். இவரது மனைவி கிருஷ்ணவேனி (வயது 37).

    நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ண வேனியை மர்ம நபர்கள் கொடூரமாக குத்தி கொலை செய்தனர். அவரது கழுத்தில் 10 இடங்களிலும், வயிற்றில் 6 இடங்களிலும் கத்தி குத்து காயம் இருந்தது.

    இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை கொலையாளிகள் பற்றிய துப்பு கிடைக்கவில்லை.

    கொலை நடந்த வீட்டில், பீரோவில் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் நகையும் இருந்தது. அவை எதுவும் கொள்ளை போகவில்லை. வீட்டு கதவும் உடைக்கப்படவில்லை.

    எனவே கிருஷ்ண வேனிக்கு நன்கு அறிமுகமான வர்களே வீட்டிற்கு வந்து கொலை திட்டத்தை அரங் கேற்றி தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள். இது தொடர்பாக அவரது உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார் கள்.

    ஜெயமுருகன் குடும்பத் தினருடன் வேறு யாருக்கேனும் மோதல் உள்ளதா? கிருஷ்ண வேனியின் செல்போனுக்கு கடைசியாக பேசியவர்கள் யார்? யார்? என்ற விபரத் தையும் சேகரித்து வருகின் றனர்.

    ×