என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ. 80 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
    X

    ரூ. 80 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

    ரூ.80 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விலைவாசி உயர்வால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் துயரத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன என்று அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. கள்ள சந்தையில் தக்காளி பதுக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் விளைச்சல் குறைந்ததே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்று தெரியவந்தது. மத்திய அரசு அதை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ரூ.80 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது

    தமிழக சட்ட மன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெறவேண்டும்.

    சிலை கடத்தல் விவகாரத்தில் அரசு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். கோவில்களில் உள்ள சிலைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×