என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 30-ந்தேதிவரை நீட்டிப்பு: கலெக்டர் உத்தரவு
    X

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 30-ந்தேதிவரை நீட்டிப்பு: கலெக்டர் உத்தரவு

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி காஞ்சிபுரம் மாவட்டதில் செயல்படும் தனியார் சுயநிதி பள்ளிகளில் 2016-17 கல்வி ஆண்டிற்கான நுழைவு நிலை வகுப்புகளில் கட்டணமின்றி சேர்க்கை விண்ணப்பங்கள் பெற ஜூன் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பங்கள் அந்தந்த தனியார் சுயநிதி பள்ளிகள், முதன்மை கல்வி அலுவலர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் கிடைக்கும்.

    ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் நலிந்த பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்டோர் சேர்க்கை கோர முடியும். பள்ளி இருக்கும் இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டருக்குள் வசிப்பிடம் இருக்க வேண்டும்.

    இது தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம், மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் நலிந்த பிரிவினர் பயன் பெற 5209 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 2641 மாணவர்கள் சேர்க்கை மட்டுமே நடைபெற்றுள்ளது.
    Next Story
    ×