என் மலர்
செய்திகள்

குரோம்பேட்டை பெண் கொலையில் உறவினர்களிடம் விசாரணை
தாம்பரம், ஜூன். 15–
குரோம்பேட்டை, பாரதி புரம் நெல்லையப்பர் தெருவில் வசித்து வருபவர் ஜெயமுருகன். சாப்ட்வேர் என்ஜினியர். இவரது மனைவி கிருஷ்ணவேனி (வயது 37).
நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ண வேனியை மர்ம நபர்கள் கொடூரமாக குத்தி கொலை செய்தனர். அவரது கழுத்தில் 10 இடங்களிலும், வயிற்றில் 6 இடங்களிலும் கத்தி குத்து காயம் இருந்தது.
இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை கொலையாளிகள் பற்றிய துப்பு கிடைக்கவில்லை.
கொலை நடந்த வீட்டில், பீரோவில் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் நகையும் இருந்தது. அவை எதுவும் கொள்ளை போகவில்லை. வீட்டு கதவும் உடைக்கப்படவில்லை.
எனவே கிருஷ்ண வேனிக்கு நன்கு அறிமுகமான வர்களே வீட்டிற்கு வந்து கொலை திட்டத்தை அரங் கேற்றி தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள். இது தொடர்பாக அவரது உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார் கள்.
ஜெயமுருகன் குடும்பத் தினருடன் வேறு யாருக்கேனும் மோதல் உள்ளதா? கிருஷ்ண வேனியின் செல்போனுக்கு கடைசியாக பேசியவர்கள் யார்? யார்? என்ற விபரத் தையும் சேகரித்து வருகின் றனர்.






