என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் அருகே ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.5 கோடிக்கு மிரட்டி வாங்கிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து காஞ்சி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் எதோத்தகாரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா ராம் (60). பட்டுசேலை வியாபாரி. இவருக்கு காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடு பகுதியில் 2 ½ ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 30 கோடியாகும்.
இந்நிலையில் வெளி நாட்டில் தற்போது பதுங்கி வாழும் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி ஸ்ரீதர், ராஜாராமை செல்போனில் தொடர்பு கொண்டு அந்த நிலத்தை தனது பெயரில் பத்திர பதிவு செய்து தரவேண்டும் என மிரட்டியுள்ளார்.
ராஜாராம் அதற்கு ஒப்புக்கொண்ட நிலையில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக கவுன்சிலர் சந்துரு, விவேக் ஆனந்த் உள்ளிட்டோர் ராஜாராம் வீட்டிற்கு சென்று 5 கோடியை கொடுத்து கடந்த மாதம் 22-ம் தேதி காஞ்சீபுரம் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வரச் சொல்லி விட்டு சென்றனர்.
ராஜாராம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற போது நிலம் ஸ்ரீதர் பெயருக்கு பதிவு செய்யப்படாமல் காஞ்சீபுரம் சேக்குப்பேட்டை நடுத்தெருவில் உள்ள பிரபல ஜவுளி கடை உரிமையாளரான சுப்பிரமணியஷா என்பவரின் பெயரில் பதிவு செய்வதை கண்டு திடுக்கிட்டார்.
இதுபற்றி ராஜாராம் விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுப்பிரமணியஷா மற்றும் அவரது மகன் கணேஷ்ஷா ஆகியோர்களிடம் விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் அந்த இடம் விற்பனைக்கு உள்ளதாக புரோக்கர்கள் மூலம் அறிந்துதான் பத்திர பதிவிற்கு வந்தேன்.
இதில் மோசடி நடந்தது எனக்கு தெரியாது. எனவே அந்த நிலத்தை மீண்டும் ராஜாராம் பெயருக்கே பத்திர பதிவு செய்து கொடுக்க சம்மதிக்கிறேன் என தெரிவித்தார். இதனையடுத்து நிலம் அதன் உரிமையாளரான ராஜாராம் பெயருக்கே மாற்றப்பட்டது.
நிலமோசடியில் ஈடுபட்ட சாராய வியாபாரி ஸ்ரீதர், சந்துரு, விவேக்ஆனந்த், சுப்பிரமணியஷா, கணேஷ்ஷா ஆகியோர் மீது விஷ்ணு காஞ்சி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் வெகுவிரைவில் நியமிக்கப்படுவார், இதற்காக காங்கிரஸ் மேலிடம் தீவிர பரிசீலனையில் ஈடுபட்டுள்ளதாக புதுவை முதல் மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்
ஆலந்தூர்:
புதுவை முதல் மந்திரி நாராயணசாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களை விடுவிப்பதற்காக மறு சீராய்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு நாள் கழித்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டிய காரணம் என்ன?
ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டு மிக தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளது. இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கொலை வழக்கில் கொலையாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளது.
இப்போது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதில் சட்டம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டெல்லியில் நடந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கான மாநாட்டில் கலந்து கொண்டு புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளோம்.
புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் விமான சேவை செயல்பட்டு வந்தது. மீண்டும் புதுச்சேரியில் விமான சேவை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மத்திய அரசு அதை ஏற்றுக் கொண்டு விமான சேவையை தொடங்குவதற்கான விதிமுறைகளை அடுத்த சில தினங்களில் இறுதி செய்ய உள்ளது.
அடுத்த 2 மாதத்திற்குள் புதுவையில் இருந்து பெங்களூருக்கு விமான சேவை தொடங்குவதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால் நாங்கள் புதுவையில் இருந்து பெங்களூர் மட்டுமின்றி சென்னை, கோவை, திருச்சி, திருப்பதி, ஐதராபாத் ஆகிய பகுதிகளுக்கும் விமான சேவை தொடங்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம். அது பற்றி பரிசீலிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் வெகுவிரைவில் நியமிக்கப்படுவார் இதற்காக காங்கிரஸ் மேலிடம்தீவிர பரிசீலனையில்ஈடுபட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவைவரி, மாநிலங்களுக்கான புதிய சேவை வரி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் புதுவைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 60 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
விமானம் புறப்பட இருந்த கடைசி நேரத்தில் பயணத்தை நிறுத்தி வைத்து அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
சென்னையை சேர்ந்த முகமது மற்றும் ஒருவரது சூட்கேசில் சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணம் இருந்தது. 2 சூட்கேஸ்களிலும் ரகசிய அறை அமைத்து அவற்றை கடத்த முயன்றது தெரிந்தது.
இதையடுத்து 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ. 60 லட்சம் ஆகும்.
பயணிகளின் உடமைகள் விமானத்தில் ஏற்றப்படுவதற்கு முன்பு மத்திய தொழிற்படையினர் அதனை சோதனை செய்வது வழக்கம். அவர்களை மீறி வெளிநாட்டு பணம் கடத்தி செல்லப்பட்டது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் விமான நிலைய ஊழியர்கள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? இந்த பணம் யாருடையது? யாருக்கு கடத்தப்படுகிறது என்று மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் பாம்பு களை பிடித்த 8 பேரை கைது செய்த கிண்டி வனத்துறையினர், அவர்களிடம் இருந்து 360 பாம்புகளை பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஏராளமான பாம்புகள் நடமாடுவதாக ஊழியர்கள் புகார் கூறினர். இதையடுத்து ஆலை நிர்வாகம் சார்பில் பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வந்து சர்க்கரை ஆலையில் இருந்த ஏராளமான பாம்புகளை பிடித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சென்னை வனஉயிரின காப்பாளர் கீதாஞ்சலி உத்தரவின் பேரில் கிண்டி வனச்சரகர் முருகேசன் தலைமையில் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு சென்று நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அங்கு பிடிக்கப்பட்ட நல்ல பாம்பு, சாரை பாம்பு, கண்ணாடி விரியன், தண்ணீர் பாம்பு என 360 பாம்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதில் 4 மண்ணுளி பாம்பு குட்டிகளும் அடங்கும்.
இதையடுத்து அந்த பாம்புகளை பிடித்ததாக சிவகங்கை மானாமதுரையைச் சேர்ந்த கண்ணன் (வயது 50), பாண்டி (29), லட்சுமணன் (56), முருகன் (20), அமாவாசை (55), பரமக்குடியைச் சேர்ந்த முருகன் (45), கண்ணன் (34), திருச்செந்தூர் ஆறுமுகநேரியைச் சேர்ந்த கண்ணன் (48) ஆகிய 8 பேரை கிண்டி வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுபற்றி கிண்டி வனத்துறை சரகர் முருகேசன் நிருபர்களிடம் கூறும்போது, “பாம்புகள் இருப்பது பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தற்போது வனக்காப்பாளர் உத்தரவின் பேரில் 8 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். பிடிபட்ட பாம்புகள் அடர்ந்த காடுகளில் கொண்டு சென்று விடப்படும்” என்றார்.

சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் தாம்பரம் குப்பை கிடங்கை முற்றுகையிட்ட பொதுமக்கள் இடம் மாற்றம் செய்ய கோரி ஆர்பாட்டம் செய்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் அருகே உள்ள வேங்கடமங்கலம் குப்பை கிடங்கிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் சுற்றியுள்ள வேங்கடமங்கலம் ரத்தினமங்கலம் அகரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் குப்பை கிடங்கை குடியிருப்புகள் இல்லாத இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் பல முறை மனு அளித்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மாலை சுற்றுசூழல் துறை அமைச்சர் குப்பை கிடங்கை பார்வையிட வருவதாக பொது மக்களுக்கு தகவல் கிடைத்ததால் அமைச்சரை சந்தித்து மனு அளிக்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு குப்பை கிடங்கிற்கு வந்தனர். அப்போது அமைச்சரின் வருகைக்காக வந்திருந்த அதிகாரிகள் பொதுமக்கள் முற்றுகையிட உள்ளதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்து குப்பை கிடங்கை முற்றுகையிட்ட பொது மக்கள் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டுமென கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

திருவான்மியூரில் வாலிபரை ஹெல்மெட்டால் தாக்கி ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவான்மியூர்:
புதுச்சேரி, வாஞ்சிநாதன் தெரு கோவிந்தன் சாலையை சேர்ந்த செழியன் என்பவர் நேற்று மாலை சென்னை வந்தார். புதுவையில் செழியன் என்கிற தொழில் அதிபரிடம் வேலை செய்து வரும் இவர், வெளிநாட்டு பணமான யூரோவை இந்திய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்காக வந்திருந்தார்.
பாரிமுனையில் வெளிநாட்டு பணத்தை மாற்றி ரூ.50 லட்சத்தை வாங்கிய சண்முகம் அதனை பையில் போட்டு எடுத்துக் கொண்டு பஸ்சில் திருவான்மியூர் சென்றார். அங்கிருந்து புதுவை செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.
திருவான்மியூரில் புதுச்சேரி பஸ்கள் செல்லும் சாலையில் நேற்று இரவு 9 மணிக்கு சண்முகம் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களில் ஒருவர் புதுவைக்கு எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்டார். இந்த நேரத்தில் கொள்ளை கும்பலை சேர்ந்த இனனொரு வாலிபர் திடீரென ஹெல்மெட்டால் சண்முகத்தின் தலையில் தாக்கினார்.
இதில் நிலைகுலைந்த அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் சண்முகத்திடம் இருந்து ரூ.50 லட்சத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
இதையடுத்து திருவான்மியூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சண்முகத்தை மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றார்.
பாரிமுனையில் இருந்து சண்முகம் ரூ.50 லட்சம் பணத்துடன் பஸ்சில் செல்வதை அங்கிருந்தே கொள்ளையர்கள் நோட்டமிட்டனர். ஒருவன் பஸ்சிலேயே சண்முகத்துடன் அமர்ந்து பேசிக்கொண்டே வந்துள்ளான். அவன்தான் கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டிருக்கிறான். அவன் அளித்த தகவலின்பேரில், 6 பேர் மோட்டார் சைக்கிள்களில் பஸ்சை பின் தொடர்ந்து வந்து மிகவும் துணிச்சலுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையர்களை பிடிக்க அடையாறு துணை கமிஷனர் அபினவ் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனிப்படையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து துப்பு துலக்கி வருகிறார்கள். தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு பகுதியில் குற்றச்செயல்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்தும் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு டவுன் அண்ணாநகர் 5-வது தெருவில் கடந்த வாரத்தில் வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை போனது. இதேபோல் 8-வது தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிக்கப்பட்டது.
வழிப்பறி - கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இரவு நேரத்தில் போலீசார் ரோந்து வந்தும் கொள்ளையர் சுதந்திரமாக சுற்றி கைவரிசை காட்டி வருகின்றனர்.
கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் பிடிபடும் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இதனை கட்டுப்படுத்த முடியும்” என்றனர்.

பட்டுச்சேலை புரோக்கர்களிடையே ஏற்பட்ட மோதலில் காஞ்சீபுரம் கோவிலில் நடந்த அரிவாள் வெட்டால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் வெளிநாடு மற்றும் பல்வேறு மாவட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
நேற்று மாலை கோவிலுக்கு வந்து சென்ற பக்தர்களிடம் அதே பகுதியை சேர்ந்த பட்டுச்சேலை விற்பனை புரோக்கர்கள் ராஜூ, விஜயகுமார் ஆகியோர் புடவை வாங்குவது குறித்து பேசினர். இதில் புரோக்கர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட தகராறில் கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் ராஜூவை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் ஆட்டோ டிரைவர்கள் ராகுல் உள்பட சிலரை தேடி வருகிறார்கள்.
பட்டுச்சேலை வாங்கி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கோவிலுக்குள்ளேயே அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “கோவிலுக்கு வரும் பக்தர்களை கோவில் வாசலிலேயே பட்டுச்சேலை புரோக்கர்கள் சந்தித்து பேசுகின்றனர். இதனை தடுக்க கோவில் நிர்வாகமும், போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற சம்பவம் தொடர வாய்ப்பு உள்ளது” என்றனர்.

மதுராந்தகத்தை அடுத்த படாளத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1,500 பாம்புகள் பிடிபட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சர்க்கரை ஆலைக்கு சென்று நிர்வாகிகளிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகத்தை அடுத்த படாளத்தில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 6 மாதமாக சர்க்கரை ஆலை செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு முள்புதராக உள்ள பகுதியில் அதிக அளவில் பாம்புகள் நடமாடுவதாக சர்க்கரை ஆலை ஊழியர்கள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, சர்க்கரை ஆலை நிர்வாகம் பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வந்தனர். அவர்கள் அங்கு இருந்த 1,500 பாம்புகளை பிடித்தனர். பாம்பு பிடிக்க வந்தவர்கள் பிடிபட்ட அனைத்து பாம்புகளையும் எடுத்துச் சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சர்க்கரை ஆலைக்கு சென்று நிர்வாகிகளிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

தைவானில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மலைப்பாம்பு குட்டி பிடிபட்டது.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு தபால் துறை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால்கள் உள்ளிட்டவை சோதனைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும். அதே போல் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய தபால்களும் சோதனைக்கு பின்னர் தான் அதற்குரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள சந்தோஷ் என்பவருக்கு வீட்டு உபயோக பொருட்கள் கொண்ட ஒரு அட்டை பெட்டி பார்சல் தைவானில் இருந்து தபால் துறை அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்தது.
இதை தபால் துறை அதிகாரிகள் ஸ்கேனிங் கருவி முலம் சோதனை செய்தபோது அதில் அபாயகரமான பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த அட்டை பெட்டியை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்க இலாகா தபால் பிரிவு உதவி கமிஷனர் சந்திரசேகர் தலைமையில் அதிகாரிகள் அட்டை பெட்டியை பிரித்து பார்த்தபோது அதில் தேனீர் கப் ஒன்றும் ஒரு பையும் இருந்தது.
அந்த பையை பிரித்து பார்த்த போது, அதில் ஒரு அடி நீளமுள்ள மலைப்பாம்பு குட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெட்டியில் இருந்த முகவரியை ஆய்வு செய்தபோது அது போலியான முகவரி என தெரியவந்தது. எனவே அந்த மலைப்பாம்பு குட்டி சென்னைக்கு கடத்தி வரப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இது பற்றி சுங்க இலாகா உதவி கமிஷனர் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறுகையில், தைவானில் இருந்து வந்த பார்சலில் இருந்து மலைப்பாம்பு குட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். இதற்காக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சென்னை சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்தபோது முதியவரை ஏமாற்றி ரூ.45 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:
மேற்கு தாம்பரம் மூகாம்பிகை நகர் 2-வதுதெருவைச் சேர்ந்தவர் நீதிமணி (வயது68). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
நேற்று மதியம் இவர் தனது மொபட்டில் தாம்பரத்தில் உள்ள வங்கிக்கு சென்று நகைகளை அடகு வைத்து ரூ. 45 ஆயிரம் வாங்கினார். பணத்தை கைப்பையில் வைத்து மொபட்டில் தொங்க விட்டப்படி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
தாம்பரம் மார்க்கெட் அருகே அழகேசன் சாலையில் செல்லும்போது ரோட்டில் நின்ற வாலிபர் ஒருவர் நீதிமணியிடம், “உங்கள் பணம் ரோட்டில் சிதறி கிடக்கிறது” என்று கூறினார்.
உடனே நீதிமணி மொபட்டை நிறுத்தி விட்டு கீழே சிதறி கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வாலிபர் மொபட்டில் தொங்கி விட்ட பணப்பையை எடுத்து கொண்டு ஓடினான்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிமணி கூச்சல் போட்டார். அதற்குள் வேறு ஒரு வாலிபர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார்.
வங்கியில் இருந்து நீதிமணி பணத்தை எடுத்து வருவதை நன்கு நோட்டமிட்டு அவரிடம் ரூபாய் நோட்டு கீழே கிடப்பதாக கூறி அவரது கவனத்தை திசை திருப்பி இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நீதிமணி தாம்பரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

கடந்த 7 ஆண்டு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு ரெயில் மூலம் சென்னை சென்டிரலுக்கு வந்த நெலால் ஆனந்துக்கு நினைவு திரும்பியதையடுத்து சத்தீஷ்கரில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆலந்தூர்:
மணப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜன். இவர் அதே பகுதியில் மனநல காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இங்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நந்தம்பாக்கம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த ஒரு நபரை கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு நினைவு திரும்பியது.
இதையடுத்து அவர் தனது பெயர் நெலால் ஆனந்த் (36) என்றும், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கூறினார்.
இதை போலீசார் சத்தீஸ்கர் போலீசில் தெரிவித்தனர். பின்னர் விசாரணை நடத்தி சத்தீஸ்கர் மாநிலம் பரஸ்வாணயை சேர்ந்த அவரது உறவினர்கள் சென்னைக்கு வந்தனர். அப்போது நெலால் ஆனந்த் இவர்கள் தனது உறவினர்கள் என்று கூறினார்.
மேலும் நெலால் ஆனந்துக்கு திருமணம் ஆகி ஆமிமுன்கூராபாய் என்ற மனைவியும், சத்திரபிரகாஷ் (14) என்ற மகனும் உள்ளது தெரியவந்தது. விவசாயியான நெலால் ஆனந்த் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்தார்.
அதனால் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 7 ஆண்டு முன்பு ரெயில் மூலம் சென்னை சென்டிரலுக்கு வந்து உள்ளார் என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நெலால் ஆனந்த் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.