என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரம் குப்பை கிடங்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்
    X

    தாம்பரம் குப்பை கிடங்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் தாம்பரம் குப்பை கிடங்கை முற்றுகையிட்ட பொதுமக்கள் இடம் மாற்றம் செய்ய கோரி ஆர்பாட்டம் செய்தனர்.
    தாம்பரம்:

    தாம்பரம் அருகே உள்ள வேங்கடமங்கலம் குப்பை கிடங்கிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் சுற்றியுள்ள வேங்கடமங்கலம் ரத்தினமங்கலம் அகரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் குப்பை கிடங்கை குடியிருப்புகள் இல்லாத இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் பல முறை மனு அளித்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை சுற்றுசூழல் துறை அமைச்சர் குப்பை கிடங்கை பார்வையிட வருவதாக பொது மக்களுக்கு தகவல் கிடைத்ததால் அமைச்சரை சந்தித்து மனு அளிக்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு குப்பை கிடங்கிற்கு வந்தனர். அப்போது அமைச்சரின் வருகைக்காக வந்திருந்த அதிகாரிகள் பொதுமக்கள் முற்றுகையிட உள்ளதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்து குப்பை கிடங்கை முற்றுகையிட்ட பொது மக்கள் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டுமென கோ‌ஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×