என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு பகுதியில் தொடரும் கொள்ளையால் பொதுமக்கள் பீதி
    X

    செங்கல்பட்டு பகுதியில் தொடரும் கொள்ளையால் பொதுமக்கள் பீதி

    செங்கல்பட்டு பகுதியில் குற்றச்செயல்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்தும் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு பகுதியில் குற்றச்செயல்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்தும் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    செங்கல்பட்டு டவுன் அண்ணாநகர் 5-வது தெருவில் கடந்த வாரத்தில் வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை போனது. இதேபோல் 8-வது தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிக்கப்பட்டது.

    வழிப்பறி - கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இரவு நேரத்தில் போலீசார் ரோந்து வந்தும் கொள்ளையர் சுதந்திரமாக சுற்றி கைவரிசை காட்டி வருகின்றனர்.

    கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் பிடிபடும் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இதனை கட்டுப்படுத்த முடியும்” என்றனர்.
    Next Story
    ×