என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டுச்சேலை புரோக்கர்களிடையே மோதல்: காஞ்சீபுரம் கோவிலில் நடந்த அரிவாள் வெட்டால் பக்தர்கள் அதிர்ச்சி
    X

    பட்டுச்சேலை புரோக்கர்களிடையே மோதல்: காஞ்சீபுரம் கோவிலில் நடந்த அரிவாள் வெட்டால் பக்தர்கள் அதிர்ச்சி

    பட்டுச்சேலை புரோக்கர்களிடையே ஏற்பட்ட மோதலில் காஞ்சீபுரம் கோவிலில் நடந்த அரிவாள் வெட்டால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் வெளிநாடு மற்றும் பல்வேறு மாவட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    நேற்று மாலை கோவிலுக்கு வந்து சென்ற பக்தர்களிடம் அதே பகுதியை சேர்ந்த பட்டுச்சேலை விற்பனை புரோக்கர்கள் ராஜூ, விஜயகுமார் ஆகியோர் புடவை வாங்குவது குறித்து பேசினர். இதில் புரோக்கர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் ஏற்பட்ட தகராறில் கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் ராஜூவை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இச்சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் ஆட்டோ டிரைவர்கள் ராகுல் உள்பட சிலரை தேடி வருகிறார்கள்.

    பட்டுச்சேலை வாங்கி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கோவிலுக்குள்ளேயே அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “கோவிலுக்கு வரும் பக்தர்களை கோவில் வாசலிலேயே பட்டுச்சேலை புரோக்கர்கள் சந்தித்து பேசுகின்றனர். இதனை தடுக்க கோவில் நிர்வாகமும், போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற சம்பவம் தொடர வாய்ப்பு உள்ளது” என்றனர்.
    Next Story
    ×