என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவான்மியூரில் வாலிபரை ஹெல்மெட்டால் தாக்கி ரூ.50 லட்சத்தை பறித்த கொள்ளை
    X

    திருவான்மியூரில் வாலிபரை ஹெல்மெட்டால் தாக்கி ரூ.50 லட்சத்தை பறித்த கொள்ளை

    திருவான்மியூரில் வாலிபரை ஹெல்மெட்டால் தாக்கி ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவான்மியூர்:

    புதுச்சேரி, வாஞ்சிநாதன் தெரு கோவிந்தன் சாலையை சேர்ந்த செழியன் என்பவர் நேற்று மாலை சென்னை வந்தார். புதுவையில் செழியன் என்கிற தொழில் அதிபரிடம் வேலை செய்து வரும் இவர், வெளிநாட்டு பணமான யூரோவை இந்திய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்காக வந்திருந்தார்.

    பாரிமுனையில் வெளிநாட்டு பணத்தை மாற்றி ரூ.50 லட்சத்தை வாங்கிய சண்முகம் அதனை பையில் போட்டு எடுத்துக் கொண்டு பஸ்சில் திருவான்மியூர் சென்றார். அங்கிருந்து புதுவை செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

    திருவான்மியூரில் புதுச்சேரி பஸ்கள் செல்லும் சாலையில் நேற்று இரவு 9 மணிக்கு சண்முகம் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களில் ஒருவர் புதுவைக்கு எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்டார். இந்த நேரத்தில் கொள்ளை கும்பலை சேர்ந்த இனனொரு வாலிபர் திடீரென ஹெல்மெட்டால் சண்முகத்தின் தலையில் தாக்கினார்.

    இதில் நிலைகுலைந்த அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் சண்முகத்திடம் இருந்து ரூ.50 லட்சத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    இதையடுத்து திருவான்மியூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சண்முகத்தை மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றார்.

    பாரிமுனையில் இருந்து சண்முகம் ரூ.50 லட்சம் பணத்துடன் பஸ்சில் செல்வதை அங்கிருந்தே கொள்ளையர்கள் நோட்டமிட்டனர். ஒருவன் பஸ்சிலேயே சண்முகத்துடன் அமர்ந்து பேசிக்கொண்டே வந்துள்ளான். அவன்தான் கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டிருக்கிறான். அவன் அளித்த தகவலின்பேரில், 6 பேர் மோட்டார் சைக்கிள்களில் பஸ்சை பின் தொடர்ந்து வந்து மிகவும் துணிச்சலுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளையர்களை பிடிக்க அடையாறு துணை கமி‌ஷனர் அபினவ் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனிப்படையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து துப்பு துலக்கி வருகிறார்கள். தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×